நமது செய்தி எதிரொலி! ஹீராயினை மாற்றினார் கார்த்திக் சுப்புராஜ்!

0

பெரிய மீன் கிடைக்கும் போது, சின்ன சின்ன பொரி உருண்டைகளை அலட்சியப்படுத்தும் ஹீரோயின்களுக்கு இந்த சம்பவம் சரியான பாடமாக இருக்கும். கன்னடத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகி, அந்தப்படத்தின் ஷுட்டிங்கிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்த சம்யுக்த ஹெக்டே, கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் அல்லவா? அவர் நடித்துக் கொண்டிருந்த வேறொரு படக்குழுவினரை தவிக்க விட்டுவிட்டு ஓடி வந்தது தெரிந்தும் அவருக்கு ஆதரவு கொடுத்த கார்த்திக் சுப்புராஜின் சுயநலத்தை புட்டு புட்டு வைத்தது நமது நியூ தமிழ்சினிமா.காம். http://newtamilcinema.in/actress-kidnapped-by-karthick-subburaj/

இதற்கப்புறம் ஹெக்டேவை அழைத்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், “உங்க பஞ்சாயத்தை தீர்த்துட்டு அப்புறம் வாங்க. பார்க்கலாம்…” என்று கூறிவிட்டாராம். இதற்கிடையில் இதே செய்தி கன்னட மீடியாக்களில் தீயாய் பரவ, கடும் நெருக்கடிக்கு ஆளானார் சம்யுக்த ஹெக்டே.

கடைசி நேர நிலவரப்படி, கார்த்திக் சுப்புராஜ் படத்திலிருந்து அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. எப்படியோ… பலவீனமான ஆண் வர்க்கத்தை பந்தாடிப் பார்க்கும் நடிகைகளில் ஒருவருக்கு புத்தி வந்தது!

Leave A Reply

Your email address will not be published.