த்ரிஷா மீது கருணாஸ் ஆத்திரம்! முடிஞ்சா நடிச்சுப் பாரு என்றும் சவால்!

0

100 காளை மாட்டுடன் சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவேன் என்று ஆக்ரோஷமாக அறிக்கை விட்ட கருணாசுக்கு பின்னாலேயே வந்தது இடி. “அந்த வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது. மீறி போனீங்கன்னா அரெஸ்ட் பண்ணுவோம்” என்று எச்சரித்துவிட்டது போலீஸ். இதையடுத்து கருணாஸ் என்ன செய்யப் போகிறார் என்பது நாளைக்குதான் தெரியும். இந்த நிலையில், இன்று த்ரிஷா விவகாரத்தில் தன் கொடுரமான கோர மூக்கை காட்டி கோபப்பட்டிருக்கிறார் அவர்.

“பீட்டாவுக்கு ஆதரவாக இருக்கும் த்ரிஷா அந்த அமைப்பில் இருந்து விலகாத வரைக்கும் அவர் எந்த படங்களிலும் நடிக்க முடியாது. நடிக்கவும் விட மாட்டோம். அவர் நடிக்கும் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அதை தடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் துணை தலைவராக இருக்கும் நடிகர் சங்கம் த்ரிஷாவுக்கு ஆதரவாக இருக்கிறது. த்ரிஷா மீது நடத்தப்படும் ட்விட்டர் அம்புகளுக்கு தனது கண்டனத்தை பட்டும் படாமலும் பதிவு செய்திருக்கிறது. ஆனால் நடிகர் சங்கத்தின் அங்கமாக இருக்கும் கருணாஸ், சக நடிகை மீது இவ்வளவு காட்டம் காட்டுவது அவரது ஜல்லிக்கட்டு பற்றை உணர்த்தினாலும், “தேவையா இது உங்களுக்கு?” என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

லொடுக்கு பாண்டி என்ன பண்ணப் போறாரோ?

Leave A Reply

Your email address will not be published.