காதலில் மூழ்கிய கருப்பன்! விஜய் சேதுபதி வேற லெவல்!

0

‘நானும் ரவுடிதான்’ படத்தின் வெற்றிக்குப் பின், ரசம் கூட்டுப் பொரியல் அப்பளத்துடன் அந்த கூட்டணியை இலையோடு நகர்த்திக் கொண்டு வந்தார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அப்புறம் கூட்டு தனியாக பொரியல் தனியாகப் போய், கடைசியாக மிஞ்சியது விஜய் சேதுபதி மட்டும்தான். இருந்தாலும் இந்தப்படத்தை நானும் ரவுடிதான் படத்தைவிட பெரிய ஹிட்டாக்கி காட்டல…? என் பேரு ரத்னம் இல்லே என்கிற கோபத்துடன் அவர் உழைத்த உழைப்புதான் இப்போது சிறப்பாக வந்து நிற்கிறதாம்.

ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பன், ஆக்ஷன் படம் என்றுதானே நினைக்கிறீர்கள். அருமையான காதல் படமாக வந்திருக்கிறதாம் அது. விஜய் சேதுபதி கேரியர்ல வேற லெவல் படமா இருக்கும் என்று இப்பவே பாராட்டுக் குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன கோடம்பாக்கத்தில்.

முதல் படமான பலே வெள்ளையத் தேவாவில் படு பயங்கரமாக காலை வாரிய நடிகை தன்யா, அதற்கப்புறம் பிருந்தாவனம் படத்தில் நம்மை கொள்ளை கொண்டாரில்லையா? அவருக்கும் கருப்பன் பெரிய வெற்றியை தந்து இன்டஸ்ட்ரியிலிருக்கும் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா புகழில் ஓட்டை போடும் என்று கணிக்கிறார்கள்.

ஒல்லி பில்லி தன்யாவை ஓங்குதாங்கு விஜய் சேதுபதி காதலிப்பதுதான் சற்றே டொய்ங்…

Leave A Reply

Your email address will not be published.