நான் பாலா ஸ்டூடன்ட், நிஜமாவே அடிப்பேன்! வரலட்சுமியால் மிரட்டப்பட்ட காமெடியன்!

0

காட்டேரியோ, பேயோ, ஆவியோ, பிசாசோ… சம்பந்தப்பட்ட ‘அது’களே வந்து ரிட் மனு போட்டாலொழிய ஹாரர் படங்களுக்கு அழிவில்லை! கோடம்பாக்கத்தின் இன்னொரு பேய் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ‘காட்டேரி’. யாமிருக்க பயமேன் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த டீ.கே தான் இப்படத்தின் இயக்குனர். சோனம் கபூர், வைபவ் ஜோடியாக நடிக்க, சுமார் அரை டஜன் நடிகர்கள் அக்கடா துக்கடா கேரக்டரில் நடிக்கிறார்கள்.

அதில் முப்பது நாள் கால்ஷீட் கொடுத்து முழு நீள காமெடி ஆக்டராக நுழைந்திருக்கிறார் ரவி மரியா. வில்லனாகவே நடித்து வந்த இவரை லேசாக வில்லனிக் காமெடி செய்ய வைத்தவர் டைரக்டர் எழில். இந்தப்படத்தில் வில்லனிக் நறுக்கப்பட்டு முழு நீள காமெடியன் ஆகியிருக்கிறார் ரவி மரியா. வரலட்சுமி, சோனம் தவிர மூன்றாவது ஹீரோயின் நான்தான் என்று வெட்கம் காட்டினார் ரவி மரியா. பிரஸ்மீட்டுக்கு அந்தந்த நடிகர்கள் அந்தந்த கெட்டப்புகளில் வந்திருக்க… ரவிமரியாவின் கெட்டப், சத்தியமான குளுகுளு செட்டப்! மீசையை மட்டும் எடுத்துவிட்டு வந்திருந்தால் ரம்பா கெட்டார்.

மேடையில் ஒரு கதா கலாட்சேபமே நடத்திவிட்டார் மனுஷன். அப்போது அவர் சொன்ன தகவல் ஒன்றுதான் செம கலகலப்பு. படத்தில் வரலட்சுமி என்னை உதைக்கிற மாதிரி ஒரு காட்சி. உதைக்கறதுக்கு முன்னாடி சார்… சேஃப்டி கார்ட் போட்டு இருக்கீங்களான்னு கேட்டார். நான் எதுக்கும்மான்னு கேட்டேன். இல்ல… நான் பாலா சார் ஸ்டூடன்ட். நிஜமாவே உதைச்சுருவேன்னாரு. அப்புறம் பயந்து போய் கார்டு வாங்கி மாட்டிகிட்டுதான் உதை வாங்கினேன் என்றார்.

இந்த அருமையான ஸ்டோரி டெல்லிங் சமயத்தில் அங்கு வரலட்சுமி இல்லையே என்கிற வருத்தத்தோடு கலைந்தது பிரஸ்!

Leave A Reply

Your email address will not be published.