அரசு ஊழியர்களுக்கு கபாலி டிக்கெட்! கிறுகிறுக்க வைக்கும் கிரண்பேடி!

மட்டையாகுற அளவுக்கு குடிச்சுட்டு, கட்டையா மிதக்கணுமா? கவலையே வேணாம்… பாண்டிச்சேரிக்கு போ! ‘மலிவு விலை…ஒசத்தி சரக்கு’ என்ற ஒரே தாரக மந்திரத்தோடு இயங்கும் பாண்டியில், பக்தி மணத்திற்கும் பஞ்சமில்லை. காரைக்கால் அம்மையார் கோவில், அரவிந்தர் அன்னை ஆசிரமம், ஆரோவில் என்று நிறைய இருக்கிறது. ஆனால் பட்டைய போட வேண்டும் நினைப்பவர்களில் பாதி பேர் கூட, நெற்றி கொள்ளாதளவுக்கு விபூதி பட்டைய போட வேண்டும் என்று நினைப்பதில்லை. அதனால் பாண்டி என்றாலே சரக்கும் சைட் டிஷ்ஷும்தான் என்ற சிந்தனை மேலோங்கிவிட்டது ஜனங்களுக்கு.

இந்த எண்ணத்தை ஓரளவுக்காவது மாற்றி நகர்த்தி வைக்க வேண்டும் என்றால், ஏதாவது அதிரடியாக நடந்தால்தான் உண்டு. அதற்காகதான் அல்லும் பகலும் மெனக்கெடுகிறார் பாண்டியின் துணை நிலை ஆளுனர் கிரண்பேடி! பவர் ஸ்டார் சீனிவாசனை ஒருமுறை மேடையில் சந்தித்த கிரண்பேடி, “நான் திகார் ஜெயில்ல இருக்கும் போது நீங்க வந்திருந்தா உங்களை மற்ற கைதிகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க சொல்லி வாத்தியாராக்கியிருப்பேன்” என்றார். இப்படி எந்த குப்பையை பார்த்தாலும், அதிலிருந்து எண்ணெய் எடுக்க முடியுமா என்று யோசிக்கிற கிரண்பேடிக்கு, மாநிலத்தை முதலிடத்தில் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசை இருக்காதா?

ஓப்பனாகவே ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கிரண்பேடி. அவர்தான் இப்ப எல்லாத்தையும் விட்டுட்டாரே? ஹையோ… அதுக்காக இல்லை. பிறகு?

புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத் தூதராக ரஜினிகாந்த் வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார். இது ஒருபுறமிருக்க, புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கபாலி படத்தின் டிக்கெட்டுகளை ஊக்கப் பரிசாக அம்மாவட்ட கலெக்டர் வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும், இது அங்கே பெரிய அளவில் ஆதரவை பெற்றுள்ளது என்றும் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

கிரண்பேடியே களத்தில் இறங்கி கபாலி டிக்கெட் விற்க கிளம்பிய பின்பு, ரஜினி சார் ரேஞ்ச் எங்கேயோ போயிடுச்சு என்றுதானே அர்த்தம்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கபாலி பிளைட்! மகிழ்ச்சி என்றார் ரஜினி!

நமது இணைய தளத்தில் சில வாரங்களுக்கு முன்பே குறிப்பிட்ட விஷயம்தான். இப்போது கண்கூடாக அரங்கேறியிருக்கிறது. ஜுன் 14 ந் தேதியே ‘சவுந்தர்யா வேணாம்னு சொன்னா வேணாம்தான்! இது...

Close