யூரோதான் ஹீரோ! கோடம்பாக்கத்தில் புதுக் கொள்ளை!

0

மோடியின் பண மதிப்பிழப்பு விவகாரத்திற்கு பின் கருப்புப்பணம் ஒழியும் என்று நினைத்தால், “நைனா… அதுக்கு வேற ஆள பாரு” என்பார்கள் போலிருக்கிறது சினிமாக்காரர்கள். தமிழ்சினிமாவை பொருத்தவரை எப்பவுமே சம்பளம் வாங்குகிறவரும் சரி, கொடுக்கிறவரும் சரி. பிப்டி பிப்டி கொள்கையைதான் கடை பிடித்து வந்தார்கள். சில ஹீரோக்கள் அதிலும் கெட்டி. முப்பது சதவீதத்தை மட்டுமே கணக்கில் காட்டி வந்தார்கள். மீதி பணத்தை கருப்பு பணமாக வாங்கி, கருப்பாகவே பதுக்கி வைத்திருந்தார்கள். அந்த பதுக்கல் பணத்தில்தான் பாறாங்கல்லை போட்டு நசுக்கினார் மோடி.

‘எரிச்சு சாம்பலா வச்சுருந்தா கூட எட்டு ஏக்கருக்கு உரமா போட்டிருக்கலாம்’ என்கிற அளவுக்கு மூட்டை மூட்டையாக வைத்திருந்த பணக்கட்டுகள், எப்படியோ வெற்றுப் பேப்பராகவே இடம் மாறின. எம்மதிப்பும் இல்லாமல் சும்மாவே போய் சேர்ந்த பணத்தை எண்ணி எண்ணி இம்சை படுவதை விட இனிமேல் ஒரு உஷார் கொள்கையை கடைபிடிப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அண்மைக்காலமாக இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப் போகிற தயாரிப்பாளர்களுக்கு இன்னொரு தலைவலியும் சேர்ந்திருக்கிறது.

30 சதவீதத்தை இந்தியன் ரூபாயா கொடுங்க. மீதி 70 சதவீதத்தை யூரோ வா மாத்திக் கொடுங்க என்கிறார்களாம். ஏன்? அமெரிக்க டாலரா வாங்கி வச்சுக்கலாம்ல? அங்குதான் நரியின் குறுக்குத் தந்திரம் வேலை செய்திருக்கிறது இவர்களுக்கு. அமெரிக்க டாலரை பொருத்தவரை இப்போது அதிபராக பதவியேற்றிருக்கும் ட்ரம்ப்பை நம்ம ஊரு சுப்ரமணியசாமி ரேஞ்சில்தான் நினைத்து வைத்திருக்கிறார்கள் நம்ம ஹீரோக்கள். எந்த நேரத்துல என்ன பண்ணுவாரு அந்தாளுன்னு தெரியாது. ஆனால் யூரோன்னா, 12 நாட்டு அதிபர்கள் ஒண்ணு சேர்ந்து கையெழுத்துப் போட்டால்தான் செல்லாதுன்னு சொல்ல முடியும். அதனால் நமக்கு உகந்தது அதுதான் என்கிற முடிவெடுத்தார்களாம்.

பொது அறிவைவே படுக்கப் போட்டு போஸ்ட் மார்ட்டம் பண்ணுற அளவுக்கு தேறிட்டாங்களேப்பா…

Leave A Reply

Your email address will not be published.