கோக்கு மாக்கு கொடி வசனம்? ரிலீஸ் நேரத்தில் தனுஷ் எஸ்கேப் பிளான்!

0

அரசியலை நையாண்டி செய்யும் ஆயிரம் படங்கள்தான் வரட்டுமே? அதற்காக ஒரு ரசிகனும் ஜீவா ஆக மாட்டான். (ஐ மீன் கொட்டாவி விட்டு கொல்ல மாட்டான்) எல்லா படங்களையும் ரசித்து சிரித்துவிட்டு போக வைக்கும் அரசியல் நையாண்டி படங்களை லாவகமாக கையாள்வதில் மறைந்த இயக்குனர் மணி வண்ணனுக்கு நிகர் அவரே. அதற்கப்புறம் அவர் பெயரை சொல்வது மாதிரி ஒரு படம் வரப்போகிறதென்றால் அது தனுஷின் கொடியாக இருக்கக் கூடும் என்கிறது சினிமா வட்டாரம்.

த்ரிஷாவும் ஒரு தெனாவெட்டு அரசியல்வாதியாக வருகிறாராம். இவருக்கும் தனுஷுக்கும் நடுவே நடக்கும் கோக்குமாக்கு உரையாடல்கள் திகைக்க வைக்கும். மலைக்க வைக்கும். நடுவில் யார் யாரையோ நினைக்க வைக்கும் என்றெல்லாம் பேச்சிருக்கிறது. மாமனார் ரஜினி, ரம்யா கிருஷ்ணனிடம் பேசிய நக்கல் குத்தல் டயலாக்குகளையெல்லாம் கூட மிஞ்சுகிற விதத்தில் மருமகன் தனுஷின் குத்தல் இருக்கும் என்கிறார்கள். அது போகட்டும்… இந்த படத்தையும் தேர்தலுக்கு முன் கொண்டுவரதான் திட்டமிட்டிருக்கிறாராம் தனுஷ்.

சூடு பறக்கும் அரசியல் வசனங்களை வைத்துவிட்டு எப்படி தைரியமாக நடமாடப் போகிறார் மிஸ்டர் மாப்பிள்ளை? அதற்காகதான் ஒரு திட்டம் வைத்திருக்கிறாரே? இப்படம் திரைக்கு வருகிற நேரத்தில் அவர் நடிக்கப் போகும் ஹாலிவுட் படத்தின் கேரக்டர் பில்டிங் போர்ஷனுக்காக ஹாலிவுட் போய்விடுவாராம் அவர். அப்புறம் இங்கு என்ன நடந்தால் அவருக்கென்ன?

Leave A Reply

Your email address will not be published.