குரங்கு பொம்மையை ஹிட் ஆக்கிய விஜய் சேதுபதி!

0

ஒரு நல்லப்படம் ஓடுவதற்கு அது நல்லப்படமாக இருந்தால் மட்டும் போதாது. கோடம்பாக்கத்தின் தட்ப வெப்ப நிலையும் அதற்கு சாதகமாக இருக்க வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ ‘குரங்கு பொம்மை’ படத்திற்கு அப்படியொரு சுச்சுவேஷன் அமைய, நாலா பக்கத்திலுமிருந்து ஜோராக கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டது.

அதென்னய்யா சுச்சுவேஷன்?

நல்ல தியேட்டர்கள் அமைய வேண்டும். அதே நாளில் வெளிவருகிற மற்ற படங்கள் மொக்கையாக இருக்க வேண்டும். இவ்விரண்டு சகுனங்களும் இனிதே அமைந்துவிட்டன குரங்குக்கு. விவேகம், அஜீத் ரசிகர்களின் சில நாள் கூக்குரல் கோஷங்களோடு தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. விஜய்சேதுபதியின் புரியாத புதிர், சில வருஷங்களுக்கு முன் எடுக்கப்பட்ட பழைய படம் என்பதோடு சுவாரஸ்யமில்லாத திரைக்கதை காரணமாக முதலிரண்டு ஷோவுக்குள்ளேயே சுருண்டு படுத்துவிட்டது.

ஆனால் படைப்பு உருவாக்க ரீதியாகவே முதல் மார்க் பெற்றுவிட்ட குரங்கு பொம்மை படத்திற்கு திரையுலகத்தின் பல்வேறு பிரபலங்கள் ஆஹா ஓஹோ மார்க் போட்டு கொண்டாடியதோடு நிறுத்திக் கொள்ளாமல் தங்களது ட்விட்டர் பக்கத்திலும் பாராட்டி வருகிறார்கள்.

முதலில் 150 ஸ்கிரீன்களில் ஓப்பன் ஆன குரங்கு பொம்மை, இன்னும் நாற்பது ஸ்கிரீன்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னணியில் இருக்கும் விஜய்சேதுபதியை, பந்தயத்திலேயே இல்லாத விதார்த் முந்துவதுதான் கோடம்பாக்கத்தின் விபரீத அதிசயங்களில் ஒன்று.

Leave A Reply

Your email address will not be published.