லாரன்ஸ்சுக்கு இப்படியா சிக்கல் வரணும்?

0

‘நான்தான் கோபாலகிருஷ்ணன்னு சொல்லிக்கிறேன். ஆனா எல்லாரும் சப்பாணின்னுதானே கூப்பிடுறான்’. இந்த டயலாக்குக்கு முற்றிலும் பொருத்தமான படமாகிவிட்டது ‘மொட்ட சிவா, கெட்ட சிவா’. படம் வெளியாகி பதினைந்து நாட்கள் வரைக்கும் ஹிட்டு ஹிட்டு என்று கூவி வந்தார்கள் லாரன்சும், அப்படத்தின் இயக்குனர் சாய்ரமணியும். ஆனால் நிஜ நிலவரம் நாக்கு தள்ளிவிட்டது.

போகட்டும்… பிரச்சனை அதுவல்ல இப்போது. ஷுட்டிங்கின்போது, கலவரத்தில் இறந்த போலீஸ் அதிகாரிகளின் படங்களை ஒரு சீனில் காட்ட நினைத்தார் சாய் ரமணி. ஆர்ட் டைரக்டரிடம், அப்படி இறந்த நிஜமான போலீஸ் அதிகாரிகளின் படம் இருந்தால் தேவலாம் என்றாராம். நாலாபுறமும் அலைய அலுப்புப்பட்ட ஆர்ட், நெட்டில் டவுன்லோடு பண்ணி டிஸ்பிளே பண்ணிவிட்டார். அங்குதான் எறுமை கொம்பில் வெள்ளை சட்டையை காய வைத்தது போலாகிவிட்டது சுச்சுவேஷன். டவுன்ட்லோடில் உயிரோடு இருந்த அதிகாரி படமும் வந்து சேர… அப்படியே அவர் டிஸ்பிளேவிலும் இடம் பிடித்துவிட்டார்.

சில தினங்களுக்கு முன்தான் அவர் மொ.சி.கெ.சி படத்தை பார்த்தாராம். செத்துப்போன லிஸ்ட்டில் நம்ம படமா? என்று அதிர்ந்தவர், படத்தின் இயக்குனர், ஹீரோ, தயாரிப்பாளர் என்று எல்லாருக்கும் நோட்டீஸ் அனுப்பிவிட்டார். ஏற்கனவே நோக்காடு… இதுல எதுக்குடா இந்த வேக்காடு என்று கடுப்பான சாய்ரமணி, ஆர்ட் டைரக்டரை பிடித்து லெப்ட் ரைட் வாங்க… எதிர்முனை இப்போ திக் திக்!

கூட்டமா சேர்ந்து கோர்ட்டுக்கு போகணும். நஷ்டஈடு தரணும். கொடுக்கறதை அந்த அதிகாரி ஏத்துக்கணும். ஓடாத படத்திற்கு இன்னும் ஓடா தேயுணுமே என்று அலறுகிறார்களாம் அத்தனை பேரும்!

Leave A Reply

Your email address will not be published.