லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்! கைவிட்ட கவுன்சிலிங்! பிக் பாஸ்க்கு விடை!

0

ஓவியா மீது யாரெல்லாம் அன்பு வைத்திருக்கிறார்களோ, அல்லது அவர் யார் மீதெல்லாம் அன்பு வைத்திருக்கிறாரோ, அத்தனை பேரும் நேற்று ஓவியாவை சந்தித்துவிட்டார்கள். கைதேர்ந்த மனோதத்துவ நிபுணர்களும் வந்து இதுவரை நான்கு முறை கவுன்சிலிங் கொடுத்துவிட்டார்கள். ம்ஹும்… ஓவியாவின் மன அழுத்தம் குறையவே இல்லை. இதையடுத்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள ஓவியா, இன்று மாலை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கமலை சந்திப்பார் என்கிறது முக்கியமான சோர்ஸ்.

இனிமேலும் அவர் அங்கு இருப்பதை அவரது நலன் விரும்பிகள் விரும்ப வில்லையாம். ஒவியா வாயிலிருந்தே “நான் வீட்டுக்குப் போறேன்” என்று சொல்ல வைத்து அவரை அழைத்துச் செல்லும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

எனவே இன்றோடு பிக் பாஸ் நிகழ்ச்சியின் என்ஜின் ஆஃப் செய்யப்படுகிறது. மீண்டும் அதை ஓட வைக்கிற தந்திரம் கமல் கையில் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.