லாரன்ஸ் வெறும் ஹீரோ இல்ல! சக்தி வாசு நெகிழ்ச்சி

0

பி.வாசு பையனா இது? இந்த கேள்வியை சுமார் பத்து வருஷங்களுக்கு முன் வியப்போடு எழுப்பி வைத்தார் சக்திவாசு. மறுபடியும் அதே போலொரு ஆச்சர்யம் எழுவதற்கு பத்து வருஷம் ஆகிவிட்டது. தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன சக்திவாசு, அதற்கப்புறம் ஆட்ட நாயகன், தற்காப்பு போன்ற படங்களில் நடித்தாலும், அவருக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் சிவலிங்கா! இன்னும் ரிலீசே ஆகலையேப்பா… என்று தமிழ் ரசிகர்கள் சந்தேகப்படலாம். ஆனால் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிக்க இப்படம் எப்பவோ வந்தாச்சு. அதில் மிக மிக முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் சக்திவாசு.

“பி.வாசு பையனா இது?” என்று கர்நாடக மாநிலமே வியந்தது. மீண்டும் அதே படம் இங்கு ரீமேக் ஆகிறது. சிவராஜ்குமார் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்க, அதே பி.வாசு இயக்குகிறார். ஒரு அடிஷனல் மாற்றம், கன்னட ‘சிவலிங்கா’ படத்திலிருக்கும் சக்திவாசுவின் கேரக்டர் இதில் இன்னும் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. ஏன்யா ஏன்?

லாரன்ஸ்தான் காரணம்! கன்னட சிவலிங்காவை பார்த்த லாரன்ஸ், அதில் வரும் சக்திவாசுவின் கேரக்டரை இன்னும் பெரிசு பண்ணினால்தான் கதைக்கே இன்னும் வலு ஏறும் என்று கூறிவிட்டார். “வெறும் ஹீரோவா மட்டும் இருந்திருந்தா மாஸ்டர் அப்படி சொல்லியிருக்க மாட்டார். ஆனால் அவருக்குள் இருக்கும் டைரக்டர்தான் அப்படி சொல்ல வைத்தார் ”என்கிறார் சக்தி வாசு.

படத்தில் பட்டுக் குஞ்சம் என்ற கேரக்டரில் நடிக்கிறார் வடிவேலு! “படம் முழுக்க நான் வருவேன். வடிவேலுவும் வருவார். ஆனால் நானும் அவரும் சேர்ந்து நடிப்பது போல ஒரு காட்சியும் இல்ல. அதுதான் ரொம்ப வருத்தம்” என்றார் சக்தி வாசு! சிவலிங்கா வந்தபின் தமிழ்நாட்லேயும் நமக்கு ரசிகர் மன்றங்கள் முளைக்க ஆரம்பிச்சுரும். நம்பிக்கையோடு தோள் குலுக்குகிறார் சக்தி வாசு.

முதல்ல வர்றவங்களுக்கு முன்னுரிமை உண்டா பிரதர்?

Leave A Reply

Your email address will not be published.