குஷ்பு வரட்டும்… அப்புறம் பாருங்க! டைரக்டர் கான்பிடன்ட்!

0

சன் தொலைக்காட்சியில் நந்தினி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதை தயாரித்து வழங்குவது யார் தெரியுமா? குஷ்பு அண்டு சுந்தர்சி தம்பதிகள்தான். அப்புறமென்ன? “சீரியலாக இருக்கக் கூடாது. சினிமாவாக இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டார்களாம் இருவரும். ஏராளமான படங்களை இயக்கிய ராஜ்கபூர்தான் இந்த தொடரை இயக்குகிறார். “முதலில் சின்னத்திரை தொடர் என்றதும் ஜர்க் ஆகிட்டேன். அப்புறம் சுந்தர்சிதான், கன்வின்ஸ் பண்ணினாரு. நல்லவேளை… மிஸ் பண்ணியிருப்பேன். சினிமாவை விட இங்குதான் கிரியேடிவிடிக்கும் அதிக வேலைக்கும் வாய்ப்பு இருக்கிறது” என்றார் ராஜ்கபூர்.

கதையை சுந்தர்சி எழுத, வெங்கட் ராகவன் திரைக்கதை அமைத்து, பத்ரி கே.என்.நடராஜன் வசனம் எழுதியிருக்கிறார். சுந்தர்சி படங்களுக்கெல்லாம் ஒளிப்பதிவு செய்யும் யுகே.செந்தில்குமார்தான் இந்த தொடருக்கும் ஒளிப்பதிவு. சின்னத்திரையின் பாகுபலி என்றெல்லாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளும் இந்த டீமில் நந்தினியாக நடித்திருக்கும் நித்யாராம்தான் எல்லா புகழையும் அள்ளிக் கொண்டு போகிற கதாநாயகி.

மேக்கப்பை போட்டுட்டா எனக்குள்ள என்னவோ ஆகி, அப்படியே மின்னலா மாறிடுறேன் என்றார் அவர்.

இப்பவே 100 எபிசோட் விறுவிறுப்பாக கிராஸ் பண்ணிட்டோம். திரும்புற இடத்திலெல்லாம் நந்தினி பற்றிதான் பேச்சு. இன்னும் அஞ்சு வாரம் கழிச்சு பாருங்க. குஷ்பு ஒரு கேரக்டர்ல என்ட்ரி ஆகுறாங்க. அப்புறம் இந்த சீரியலோட ஸ்பீடே வேற… என்றார் ராஜ்கபூர்.

காங்கிரஸ்சை கைப்பற்றி கதற விடுவாங்கன்னு பார்த்தா, இப்படி சீரியல்ல வந்து கதற விடப்போறாங்களா? நல்லாயிருக்குங்க உங்க டக்கு?

Leave A Reply

Your email address will not be published.