அண்ணியோ, ஃபன்னியோ? கமல் சார் கூட நடிக்கணும்

0

சமீபத்தில் வாலிப ராஜா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமலிடம், நடிகை தேவதர்ஷினி ஓப்பனாக வாய்ப்பு கேட்டது ரொம்பவே சுவாரஸ்யம். ‘நான் அஜீத் விஜய்கெல்லாம் கூட அக்கா அண்ணியா நடிச்சுட்டேன். ஆனால் கமல் சாரோடதான் நடிக்கல. அண்ணியா கூட நடிக்க தயாராக இருக்கேன். அதுவும் இல்லையா? ஃபன்னியா ஒரு கேரக்டர் கொடுங்க. நடிக்கிறேன். சேர்ந்து நடிக்கணும் அவ்வளவுதான்’ என்று கூறிவிட்டு அமர, தான் பேசும்போது இதற்கு பதிலளித்தார் கமல்.

‘என் அண்ணன் சாருஹாசனோட பொண்ணு எனக்கும் மகள்தான். அவரே எனக்கு அம்மாவா ஒரு படத்தில் நடிச்சுட்டார். கஸ்துரி கூட எனக்கு மகளாக நடிச்சிருந்தார். அதனால் இங்க அண்ணியோ, அக்காவோ கதைக்கு தேவைப்படுற ஒரு கேரக்டர் வந்தால் போதும். உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கு. என் மகளா கூட நீங்க நடிக்கலாம். யார் கண்டது’ என்றார் கமல்.

Leave A Reply

Your email address will not be published.