கருப்பு பூனைக்கு ஆசைப்படும் கல்லா நிரம்பாத நடிகர்கள்!

1

‘நாங்க ரியல் ஹீரோக்கள் அல்ல, ரீல் ஹீரோக்கள்’ என்று ஒரு விழாவில் விஷால் பேசியிருக்கிறார். இதை அப்படியே பின்புறமாக திரும்பி அவர் பக்கமிருக்கும் ஹீரோக்கள் மத்தியில் பேசினால் கூட தேவலாம் என்ற நிலையிலிருக்கிறது யதார்த்தம். கொஞ்ச காலமாக இன்டஸ்ட்ரியில் கடும் பிளாப் கொடுத்து வரும் ஹீரோக்கள் சிலர், தங்களை பெரிய ராஜகுமாரர்களாக எண்ணி கருப்புப் பூனைகள் புடைசூழ வருகிறார்கள் எல்லா இடங்களுக்கும். இவர்களை சுற்றி நின்று கொள்ளும் தடி தாண்டவராயன்கள், தொலைவில் நின்று இவர்களை ரசிக்கும் ஒன்றிரண்டு ரசிகர்களுக்கு கூட முழு தரிசனம் பெற முடியாமல் செய்துவிடுகிறார்கள். இந்த தடியர்கள் மேற்படி ஹீரோக்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்க்கிறார்களா? அல்லது நாலு முட்டை பரோட்டாவுக்கும் ஒரு முழு கோழிக்கும் ஆசைப்பட்டு வருகிறார்களா என்பதே புரியவில்லை. ஏனென்றால்… இப்படி வரும் பல ஹீரோக்கள் தங்கள் வீட்டு வேலைக்காரர்களுக்கும், வீட்டு செக்யூரிடிக்கும் கூட மாத சம்பளத்தை ஒழுங்காக கொடுப்பதில்லை என்ற தகவல்கள் வந்து சேருகின்றன.

முன்பெல்லாம் தங்கள் படம் சம்பந்தமான பாடல் வெளியீட்டு விழாக்களுக்கோ, பிரஸ்மீட்டுக்கோ வரும் நடிகர்கள் நேரே வந்து பத்திரிகையாளர்களின் தோளில் கை போட்டு பேசிய காலமெல்லாம் இப்போது இல்லை. மேற்படி தாண்டவராயன்கள் சூழ்ந்து கொள்ளவதுதான் காரணம். எந்த பத்திரிகைகாரனும் விழுந்தடித்துக் கொண்டு இவர்களுக்கு முத்தம் தரப்போவதில்லை. அப்படியிருந்தும் ஏனிந்த பர்பாமென்ஸ்? இங்கு காட்டும் இந்த பர்பாமென்சை படத்தில் காட்டினாலாவது நாலு கைதட்டல் விழும் என்று சில நிருபர்கள் கொந்தளிக்கிறார்கள். (சில ஆர்வக்கோளாறு நிருபர்கள் மட்டும் இவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள துடிப்பது சற்றே கஷ்டமாக இருந்தாலும், பவுன்சர்களை வைத்து மல்லுக்கட்டுகிற அளவுக்கு இவர்கள் தீவிரவாதிகளும் அல்ல)

ஆணானப்பட்ட ரஜினி, கமல், விஜய், மாதிரியான படா படா ஸ்டார்களே சிம்பிளாக நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, தனுஷ் விக்ரம் மாதிரியான பிளாப் ஹீரோக்களுக்கு ஏனிந்த வேலை? அதுதான் புரியவேயில்லை. நாளை பின்னால சி.எம் ஆயிட்டா இப்பவே பழகிக்கலாம்னு இருக்காங்களோ என்னவோ? ஞை…!!!

பின்குறிப்பு- 10 எண்றதுக்குள்ள படத்தின் டீஸர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது நேரில் பார்த்த காமெடியை தொடர்ந்து வந்த குமுறல் இது!

1 Comment
  1. sandy says

    விக்ரம், அவருடைய சினிமா வாழ்வின் அஸ்தமத்தை நோக்கி போய்கொண்டு இருக்கிறார்..
    ஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாது சீயான்..

Leave A Reply

Your email address will not be published.