நயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி?

0

‘குடை கூட முக்கியமில்ல… குடை கம்பிதான் முக்கியம்’ என்று நினைத்தால், அந்த மழையே காறித் துப்பும். அப்படியொரு மோசமான மொமென்டில் இருக்கிறது லைக்கா கம்பெனி. யெஸ்… நாளைக்கு வெளியாகவிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பிரமோஷன் செய்தி இன்று எல்லாருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. படித்தவர்களின் உச்சி மண்டையில் கேள்விக்குறியும் ஆச்சர்யக்குறியும் கட்டிப்புரண்டு சண்டை போடுவது உறுதி.

‘யோகிபாபுவின் காதலை நயன்தாரா ஏற்றுக் கொண்டாரா?’ என்பதுதான் அந்த மிக நீண்ட பிரஸ் ரிலீசின் கேள்வி. அடப்பாவிகளா? நயன்தாராவை பற்றி தனியாக செய்தி வெளியிட்டால் ஒருவரும் சீண்ட மாட்டார்கள் என்பதற்காக யோகிபாபுவின் இதயத்தில் எதற்கய்யா குண்டூசியால் கோலம் போடுகிறீர்கள்?

இதையெல்லாம் நம்புகிற நிலையிலா இருக்கிறார்கள் ரசிகர்கள்? காலம் மாறிவிட்டது. ஆணானப்பட்டவர்களே அலறுகிற அளவுக்கு பர்பாமென்ஸ் பண்ணும் மக்களை, இன்னும் அப்பாவிகளாக நினைத்து அளக்கும் இந்த பட கோஷ்டியை எந்த லிஸ்டில் வைப்பது?

இப்படத்திற்காக மூன்று கோடி சம்பளம் வாங்கியிருக்கும் நயன்தாராவை நம்பாமல், கேவலம் மூன்று லட்சம் கூட வாங்காத யோகிபாபுவை நம்பியிருப்பது அநியாயத்திலும் அநியாயம்!

ஆந்தையை வச்சு அழகுப்போட்டி நடத்துறாங்க. மக்களே உஷார்!

Leave A Reply

Your email address will not be published.