போங்கய்யா நீங்களும் உங்க நியாயமும்… சென்சார் மீது பாய்ந்த சினிமா பாடலாசிரியர்!

0

அரசியல்வாதிகளை விட படு மோசமான பல்டியாளர்கள் இந்த சென்சார் ஆபிசர்கள்தான் போலிருக்கிறது. ‘அந்தப்படத்துக்கு அப்படி சொன்னியே, இந்தப்படத்துக்கு ஏன் இப்படி சொல்றே?’ என்று கேட்டால், ‘வாயை மூட்றியா இல்ல… படத்தையே பண்டலுக்கு அனுப்பிடவா?’ என்று மிரட்டுகிற கொடூரம் தமிழ் நாட்டில் மட்டும்தானா? அல்லது வேறு மாநிலங்களிலும் உண்டா? அந்த அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இந்தப்படத்தில்தான் ‘ஹரஹர மகாதேவகி’ என்று துவங்கும் ஒரு பல்லவியை எழுதியிருந்தார் கவிஞர் சொற்கோ. படக்கென்று கட்டையை போட்ட சென்சார், இந்த வரிகளை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது. அப்புறம் எப்படியோ போராடி பாடலை சிறிய அளவு சேதாரத்துடன் வெளியே கொண்டு வந்தார்கள்.

திரு.வி.க பூங்கா என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த சொற்கோ, இந்த விஷயத்தை நினைவுபடுத்தினார். “அன்னைக்கு அப்படியொரு வரிகள் வரக் கூடாதுன்னு எங்களை எச்சரித்த சென்சார், இன்னைக்கு அதே பெயர்ல ஒரு படத்தையே வர அனுமதிக்குது. இந்த கொடுமையை எங்கு போய் சொல்றது? அன்னைக்கு ஒண்ணு. இன்னைக்கு ஒண்ணுன்னு பேசுற சென்சார் ஆபிசின் கொடூரப் போக்கை யாரு தட்டிக் கேட்கறது?” என்று புலம்பினார்.

பலாப்பழத்துக்கு அடியில சிக்குன சுண்டைக்காய்தான் சின்னப்படங்களின் நிலைமை. ஐயோ.. இது புரியாமலிருக்காரே கவிஞர்?

Leave A Reply

Your email address will not be published.