மக்கள் நீதி மய்யம்! பொசுங்கும் ஓல்டு கட்சிகள்!

1

எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதல்ல, எடுத்தது எப்போ, வீசியது எப்போ என்பதே தெரியாத அளவுக்கு படு ஸ்பீடாக களத்தில் இறங்கிவிட்டார் கமல். ‘வெறும் ட்விட்டர்ல அரசியல் பண்ணக்கூடாது. இறங்கிப் பாருங்க தெரியும்’ என்று விமர்சித்தவர்களுக்கெல்லாம், நேற்றைய பொழுது நெருஞ்சிப் பொழுது!

தமிழகத்தின் அரசியல் மேடை இப்படியும் இருக்குமா என்கிற அளவுக்கு டீசன்ட் லுக்! வெட்டிக் கூச்சல் இல்லை. வீண் பிரதாபங்கள் இல்லை. வறட்டு வார்த்தைகள் இல்லை. முதல் பொதுக் கூட்டத்திலேயே ‘அட’ போட வைத்துவிட்டார் கமல். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொடுக்கப்பட்ட அதே மரியாதையை, விவசாய சங்கத்தை சேர்ந்த பிஆர். பாண்டியனுக்கும் வழங்கியது அந்த மேடை.

பதிலுக்கு பதில் லாவணி கச்சேரியில்லாத மேடையாகவும் அதை மாற்றிக் காட்டினார் கமல். தனது அரசியல் பிரவேசத்தை விமர்சித்த தமிழிசை சவுந்தர்ராஜன், அமைச்சர் ஜெயக்குமார் இருவருக்கும் ஒரு பதிலை சொல்வார் என்று எதிர்பார்த்தால்…. ‘அவங்களுக்கு பதில் சொல்லிகிட்டு இருக்கறதா நம்ம வேலை? நாம செய்ய வேண்டியது நிறைய இருக்கு. அதை நோக்கிப் போவோம்’ என்று அவர் கூறியது நடுநிலை வகித்துவரும் வாக்காளர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கும்.

கொள்கைகள் எதையும் மேடையில் சொல்லி நேரத்தை கடத்தா விட்டாலும் விரைவில் அது புத்தமாக வரும் என்று அறிவித்தார். மேடையில் இருந்தபடியே பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கமல், ‘பேசுகிற விதத்தில் தயவாக பேசினால் அண்டை மாநிலத்திலிருந்து தண்ணீரல்ல… ரத்தத்தையே கூட என்னால் வாங்கித்தர முடியும்’ என்றார். (அண்டை மாநிலங்களை கூட சமாளித்துவிடலாம். இந்த உள்ளூர் நரிகளிடமிருந்து கடிபடாமல் தப்பித்துவிடுவாரா கமல்?)

இனிவரும் காலங்களில் அரசியல் களம் என்னவாக மாறப் போகிறது? காந்தியை துணைக்கு அழைத்துக் கொள்ளும் கமல்ஹாசனை இதே அமைதியோடு வைத்திருக்கப் போகிறதா தமிழகம்?

பார்க்கலாம்….

1 Comment
 1. தமிழ் பிரபாகரன் says

  கமல் ஒரு படத்தில் கூட சிகரெட் பிடிப்பது போலவோ, மது அருந்துவது போலவே நடித்தது கிடையாது. கமல் படத்தில் வன்முறை சண்டை காட்சிகளே கிடையாது. கமல் இதுவரைக்கும் எந்த படத்திலும் கதாநாயகிக்கு லிப் கிஸ் கொடுத்தது கிடையாது. கமல் பட பெயர் இது வரைக்கும் ஜாதி பெயரில் வந்தது கிடையாது. தனது பட வெளியிட்டு பிரச்சனையின் பொழுது, தாய் நாட்டை விட்டு, வெளிநாடு ஓடி போயிடுவேன் என்று சொல்லாதவர். தனிமனித வாழ்விலும் கமல் மிகவும் ஒழுக்கமானவர். ஒரு மனைவி ஒரு குடும்பம் என தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். நம் தமிழகத்திற்கு கிடைத்த வாராது வந்த மாமணி கமல் என்றால் அது மிகையாகாது. காமராஜர், கக்கன் இவர்களுக்கு அடுத்தது கமல் தான்.
  கமல் ஒரு இந்து மத விரோதி. தமிழ் இன துரோகி.
  தாய் நாட்டை விட்டு ஓடி விடுவேன் என்று சொன்ன கோழை.

  கமல் எப்படி மய்யமாக இருப்பான் ? ஆண் பெண் இரு பாலர் தானே \\\. அதுவே இலக்கண பிழை அல்லவா !!!
  நீட் வேண்டுமா வேண்டாமா ? நெடுவாசல் வேண்டுமா வேண்டாமா ?? கதிராமங்கலம் வேண்டுமா வேண்டாமா ??? காவேரி நீர் வேண்டுமா வேண்டாமா ???? கூடங்குளம் வேண்டுமா ???? வேண்டாமா ????? இவற்றில் கமல் எப்படி மய்யம் கொள்வான் ???
  (1) இதெல்லாம் வேண்டும் என சொல்ல வேண்டும் (2 ) இதெல்லாம் வேண்டாம் என சொல்ல வேண்டும். எப்படி ரெண்டும்கெட்டானாக இருக்க முடியும்?

Leave A Reply

Your email address will not be published.