கபாலி ஷுட்டிங் ஸ்பாட்! கல்லா கட்டும் மலேசியா சுற்றுலா கழகம்!

1

கபாலி கோட், கபாலி தாடி, கபாலி காடி, கபாலி பிரியாணி, கபாலி பிஸ்கோத்து என்று கபாலியை இஞ்ச் பை இஞ்ச் ஆக அனுபவித்துக் கொண்டிருக்கிறது ரஜினி ரசிகர்களின் மனசு. இன்னும் கபாலி அப்பளம், கபாலி கூழ், கபாலி புளியோதரைதான் வரவில்லை. மற்றபடி எங்கும் கபாலி, எதிலும் கபாலி என்கிற கோஷம் இன்னும் எத்தனை நாளைக்கோ, தெரியவில்லை.

இந்த நேரத்தில்தான் மலேசியா அரசும், இந்த கபாலி விஷயத்தை ஆற விட அனுமதிப்பேனா என்கிறது. இந்தியாவிலிருந்து வரும் டூரிஸ்டுகளுக்கு ஒரு ஸ்பெஷல் பேக்கேஜ் கொடுத்திருக்கிறது அந்நாட்டு சுற்றுலா கழகம். மலேசியாவின் சுற்றுலா ஸ்பாட்டுகளில் லேட்டஸ்டாக கபாலி பட ஷுட்டிங் நடந்த இடங்களையும் சேர்த்துவிட்டது. மலேசியாவில் பல்வேறு இடங்களில் கபாலி ஷுட்டிங் நடந்துள்ளது. இப்போது அந்தந்த இடங்களை அப்படியே சுற்றி வளைத்த சுற்றுலா கழகம், தங்கள் பிளான் அட்டவணையில் அவற்றை சேர்த்துவிட்டது.

கட்டணம்? இந்தியா பணத்திற்கு 25 ஆயிரம் ரூபாயாம்.

சத்திரத்துல இடம் கிடைக்குமான்னு தவிச்ச ஒரு திரைக்கதைக்கு, சரித்திரத்துல இடம் கொடுத்திருச்சே உலகம்! ஒண்டிப்புலி… உலகம் ரொம்ப கெட்டதுடா!

 

1 Comment
  1. Ramkumar says

    Have gelusil sir..good for your health…:-)

Leave A Reply

Your email address will not be published.