லீனா மணிமேகலையின் மீ டூ! அலறிய ‘ஆண் ’ட்ராய்டுகள்!

0

‘புல்லா முளைச்சாலும் சொல்லா முளைக்கணும்’ என்று மெனக்கெடுகிற படைப்பாளிகள் சமய சந்தர்ப்பம் புரியாமல் ‘சைட் லுக்’ விட்டதன் விளைவு? நாடெங்கும் ‘மீ டூ’ க்களில் விழுந்து வறுபடுகிறார்கள். வதை படுகிறார்கள். கதையாகிறார்கள். கன்னாபின்னாவென்று ஏசப்படவும் செய்கிறார்கள். கடந்த ஒரு வாரமாகவே சோசியல் மீடியாவிலும் செய்தி சேனல்களிலும் செத்த எலி போல மணக்கும் இந்த மன்மத மவுத் ஆர்கான்களுக்கு மறுபடியும் மறுபடியும் அபாய சங்கு.

பலரும் வந்து மீ டூ வில் பொங்கி வரும் நேரத்தில், தன் பேஸ்புக் பதிவில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு சந்தி சிரிக்க வைத்துவிட்டார் கவிதாயிணி லீனா மணிமேகலை. சில வருடங்களுக்கு முன் தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக பிரபல திரைப்பட இயக்குனர் சுசிகணேசன் பற்றி எழுதப் போக, சினிமாவுலகத்தில் பரபரப்பு. இவர் விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப்பயலே போன்ற படங்களை இயக்கியவர்.

அதற்கு பதிலளித்த சுசி கணேசன், ‘அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை. உன்னை பற்றி தெரியாதா? உன் லட்சணம் புரியாதா?’ என்றெல்லாம் பதிலுக்கு எகிறிவிட்டார். ‘நீ மன்னிப்பு கேட்காவிட்டால், உன் மீது வழக்குப் போடுவேன்’ என்றும் எச்சரிக்க… கோழி சண்டையை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தோடு கூடி விட்டது ஊர் உலகம்.

இதற்கப்புறம்தான் வேடிக்கை. இன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் லீனாமணிமேகலை. இங்கே கோடம்பாக்கத்தில் தனக்கும், தனக்கு தெரிந்த நடிகைகளுக்கும் நடக்கிற பாலியல் அத்துமீறல்களை போட்டுக் கொடுத்துவிடுவாரே என்கிற அச்சம், வாலாட்டி வந்த அத்தனை ஆண் மகன்களுக்கும் அச்சத்தை கொடுத்திருக்கிறது. சிலர் முன் கூட்டியே, ‘என்னை போட்டுக் கொடுத்துடாதே. நான் புள்ளக்குட்டிக் காரன்’ என்று மெசேஜ் அனுப்பினார்களாம்.

அதையும் அந்த பிரஸ்மீட்டில் அவர் காட்டப் போவதாக தகவல் கசிகிறது.

வெல்லத்தை நக்கிட்டு விளக்குமாத்துல விழுறது நம்ம போராளீஸ்களுக்கு புதுசே இல்ல! போட்டுத் தாக்குங்க லீனா!

Leave A Reply

Your email address will not be published.