மெர்சல் தெலுங்கு பிசினஸ்! தொடர்ந்து மிரள விடும் விஜய்!
விஜய்யின் மெர்சல் பட வியாபாரம் ஏரியா வாரியாக எடுத்துக் கொண்டாலும், ‘நான்தான் டாப்’ லெவலிலேயே இருப்பதுதான் இன்டஸ்ட்ரியின் இன்ப அதிர்ச்சி. சமீபத்தில் வெளிவந்த ‘விவேகம்’ படத்தை சர்வ அலட்சியமாக கிராஸ் பண்ணிவிட்டு போகிறது மெர்சல். அதுவும் தெலுங்கை பொருத்தவரை அஜீத் படங்களுக்கான மதிப்பு ஜீரோவுக்கு மேலே… சிங்கிள் நம்பருக்கும் கீழே!
இந்த நிலையில்தான் மெர்சல் படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் 42 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். ஒரே நேரத்தில் படத்தை தமிழிலும் தெலுங்கிலும் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுவரை இல்லாதளவுக்கு இந்த முறை விஜய் படத்திற்கொரு ஸ்பெஷல். படத்தை வெளியிடுகிற விநியோகஸ்தர், அங்கு பல வருடங்களாக முன்னணி ஸ்டாராக விளங்கிக் கொண்டிருக்கும் பவன் கல்யாண் படங்களை வாங்கி வெளியிடுகிற பெரிய விநியோகஸ்தர். இந்த முறை விஜய் படத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, யு ட்யூபில் மெர்சல் டீசர் வெளியான சில மணி நேரத்திற்குள்ளேயே விவேகம் ரெக்கார்டை முறியடித்திருக்கிறது. விவேகம் வாங்கி பலத்த நஷ்டமடைந்திருக்கும் விநியோகஸ்தர்கள், அஜீத் வீட்டின் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடும் என்கிற ரகசிய தகவல், இந்த மெர்சல் மழை பொழியும் நேரத்தில் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.