இப்பவே 130 கோடியை தாண்டியாச்சு! பட்ஜெட்டை விழுங்கும் மெர்சல்!

0

‘விடிஞ்ச பிறகும் இருட்டு… முடிஞ்ச வரைக்கும் சுருட்டு’ என்கிற பிற்போக்கு எண்ணத்துடனேயே படம் எடுக்க வரும் சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் தலையில் துண்டை போட்டு கழுத்து வரைக்கும் இறுக்கிய கொடுமையெல்லாம் இனியும் நிற்காது போலிருக்கிறது. ஒரு படத்திற்கு ஒரு பட்ஜெட்டை நிர்ணயித்து, அதிலிருந்து பைசா தாண்டாமல் படமெடுப்பதுதான் சரியான இயக்குனருக்கு அழகு. அப்படி எடுத்தால்தான் போட்ட பணத்தை சிதறாமல் எடுக்க முடியும் தயாரிப்பாளரால்.

ஆனால் ‘சிக்குனாண்டா ஒருத்தன்’ என்ற குணத்தோடு வரும் அட்லீ மாதிரியான இயக்குனர்கள் எதைதான் சாதிக்கப் போகிறார்களோ? (இவர்தான் தெறி படத்தின் கதை டிஸ்கஷனுக்கே ஐம்பது லட்சத்திற்கு மேல் செலவு செய்து தயாரிப்பாளரை தெறிக்க விட்டவர்)

விஜய்க்கு பெருமளவு வியாபாரம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக பணத்தை அள்ளி இரைக்க முடியாதல்லவா? தற்போது தயாராகி வரும் மெர்சல் படம் கிட்டதட்ட முடியும் தருவாயிலிருக்கிறது. இன்னும் சில தினங்கள்தான் ஷுட்டிங் பாக்கி. இது வரைக்கும் சுமார் 130 கோடிக்கும் மேல் செலவாகிவிட்டதாம். அதிலும் ஒரு நாளைக்கு ஒரு ஷாட், அல்லது இரண்டு ஷாட் மட்டுமே எடுத்து தன் தொழில் வேகத்தை நிலை நாட்டி வந்திருக்கிறார் அட்லீ.

என்ன செய்ய? நல்லவன் உண்மை சொன்னாலும் நம்பாத தயாரிப்பாளர்கள், கெட்டவன் பொய் சொன்னால் சத்தியம் சத்தியம் என்கிறார்களே… இதுவும் நடக்கும். இதுக்கு மேலேயும் நடக்கும்.

Leave A Reply

Your email address will not be published.