பாகுபலி எழுத்தாளரை பதறவிட்ட மெர்சல்! அட்லீ ஆப்சென்ட்!

1

‘உங்க கதையில் நடிக்கணும்னு விஜய் சார் விரும்புறார்’ என்று பாகுபலி எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத்திடம் (எஸ்.எஸ்.ராஜமவுலியின் அப்பா) பேசி அவரை கன்வின்ஸ் செய்தவர் அட்லீதான். ‘தமிழ்நாட்ல எழுத்தாளர்களுக்கு ஏதுப்பா மரியாதை? உரிய சம்பளம் கூட கொடுக்க மாட்டீங்களே?’ என்றாராம் அவர்.

‘அப்படியெல்லாம் இல்ல சார். உங்க மேல விஜய் சார் நல்ல மரியாதை வச்சுருக்கார். மூணு கோடி சம்பளம் வாங்கித் தர்றேன்’ என்று கூறி, எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்து அவரை கமிட் பண்ணினாராம் அட்லீ. அப்புறம்? படம்தான் முரட்டுப் பாய்ச்சல் பாயுதே… மிச்ச பணம் போயிருக்கும் என்றுதானே நினைக்கிறீங்க? அதுதான் இல்லை. ரிலீஸ் சமயத்தில் 50 லட்சம் கொடுத்து கணக்கை முடித்துவிட்டார்களாம். கிட்டதட்ட ஒரு கோடி சம்பள பாக்கி.

அட்லீயை தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம் விஜயேந்திர பிரசாத்தால். ‘தமிழ்நாட்ல எழுத்தாளனை மதிக்க மாட்டாங்கன்னு தெரிந்தே குழியில விழுந்துட்டனே…’ என்று குமுறி குமுறி கோபப்படுகிறாராம் மிஸ்டர் பாகுபலி.

சங்க பலகையாக இருந்தாலும், அதுல புரோட்டா மாவு உருட்டிப் பார்க்கறதுதான் எங்க ஸ்டைல்! எங்கய்யா அட்லீ?

1 Comment
  1. Vithu says

    Elluthu iyakkam Atlee endru varuthu
    Ivar Enna seithar??? 2cro kku

Reply To Vithu
Cancel Reply

Your email address will not be published.