மெர்சல் டைட்டில் முடக்கம்! பின்னணியில் கருணாஸ் எம்.எல்.ஏ?

0

கடந்த இருபத்தி நான்கு மணி நேரமாக தமிழகமெங்கும் தலைவலி மாத்திரை அதிகளவுக்கு விற்பனை ஆகியிருந்தால், அதற்கு முழு முதல் காரணமாக அமைந்திருப்பது, மெர்சல் டைட்டிலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையாகதான் இருக்க முடியும். விஜய் ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரம், ஸ்மூத்தாக முடியுமா? ஹார்டு ஆகிதான் கலையுமா? டவுட்… டவுட்…

ஆனால் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்தால், பெரிய பெரிய அதிர்ச்சிகள் வரிசை கட்டி நிற்கும் போலிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் ஏ.ஆர்.ராஜேந்திரன் என்பவர், ‘மெரசாலாயிட்டேன்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை துவங்குவதாக திட்டமிட்டிருந்ததாக கூறியிருக்கிறார். விஜய் படத்திற்கு மெர்சல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் தன்னால் இப்போது படத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குமுறியிருக்கிறார்.

இந்த தலைப்பை பற்றிய விபரங்களை தேட ஆரம்பித்த நமக்கு, ஒரு சினிமா விளம்பர போஸ்டர் மட்டும் கண்ணில் சிக்கியது.

அதில் நடிகர் கருணாசுக்கு சொந்தமான கென் மீடியா நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ‘கென் மீடியா கருணாஸ் பிரசன்ஸ்’ என்று கொட்டை எழுத்தில் உருவாக்கப்பட்டுள்ள விளம்பரம், எந்தளவுக்கு மக்களை சென்றடைந்ததோ தெரியாது. ஆனால் இந்த தலைப்பு விவகாரத்தில், விஜய்க்கு எதிராக கருணாஸ் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது.

நல்ல பதிலை கருணாஸ்தான் கூற வேண்டும்!

Leave A Reply

Your email address will not be published.