விடுங்க நாங்களே பார்த்துக்குறோம்! உஷாரான மெர்சல்!

0

‘விவேகம்’ சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் ‘அக்கடா’ என்று வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். போற வர்ற பொரி யாவாரிகள்தான், “இந்தப்படம் இவ்ளோ வசூல். நேரா அடுக்குனா ஈபிள் டவர் உசரத்தையும், பக்கவாட்டுல அடுக்குனா நெய்வேலி சுரங்கத்தையும் தொட்டுடும்” என்கிற லெவலுக்கு பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தஞ்சாவூர்ல வேட்டுப் போட்டா, மதுரையில இருக்கிற காக்காவெல்லாம் மிரண்டு ஓடிய கதையாக, ‘விவேகம்’ ரிசல்ட் ‘மெர்சல்’ படத்தை சங்கடத்திற்கு உள்ளாக்கியிருக்கிறதாம். விலைபேச வரும் விநியோகஸ்தர்கள், “சார் உங்களுக்கு தெரியாததா? விவேகம் தாக்குப்பிடிக்கல. இந்தப்படம் அதைவிட பட்ஜெட் அதிகம். என்ன பண்ணப் போறீங்க?” என்று லாக் போட…. அந்த லாக்குக்கே லாக் போட்டு அலற விடுகிறதாம் மெர்சல் நிறுவனம்.

“உங்க சகவாசமே வேணாம். படத்தை நாங்களே நேரடியாக தியேட்டர்களில் போட்டுக்குறோம். நஷ்டமோ, லாபமோ அது எங்களோட போகட்டும்” என்று கூறிவிட்டதாம்.

விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் டிசைன் டிசைனாக பிரச்சனை கொடுத்துவந்த விநியோகஸ்தர்கள், இந்த பதிலை எதிர்பார்க்கவில்லையாம். மெர்சலுக்கே மெர்சல் கொடுக்கலாம்னு பார்த்தா…. அந்த மெர்சலையே பேக் பண்ணி நம்ம தலையில வச்சுட்டாங்களே என்று முணுமுணுப்போடு கிளம்பியிருக்கிறது வி.வட்டாரம்.

Leave A Reply

Your email address will not be published.