எங்க வீட்டுப் பிள்ளை தலைப்புக்கு எதிர்ப்பு விஜய் வீட்டு முன் ஆர்ப்பாட்டம்?

0

இரண்டரை மணி நேரம் ஓடக் கூடிய ஒரு படத்தையே எடுத்துவிடும் இயக்குனர்களுக்கு, அந்த படத்திற்கு தலைப்பு வைப்பதற்குள் முழி பிதுங்கி முண்டாசு கழன்று விடுகிறது. இந்த விந்தையை நினைத்து எந்த சந்தையில் நின்று அழுவது? அட… எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் படத் தலைப்புளை கபளீகரம் பண்ணும் இந்த இயக்குனர்கள், முன்னவர்கள் செய்த சாதனைக்கு நிகராக இந்த புதிய படத்தை உருவாக்குகிறார்களா என்றால் அதுவும் இல்லை.

இப்படி மஹாபலிபுரங்களை இடித்துவிட்டு மண் குடிசை கட்டும் இவர்களுக்கு தண்டனையை ஒரிஜனல் தலைப்புகளில் நடித்த ஹீரோக்களின் ரசிகர்கள்தான் கொடுக்க வேண்டும். அந்த வகையில் கிளம்பிவிட்டது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டர் படை. அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முக்கிய தீர்மானம் இதுதான்.

எங்க வீட்டுப் பிள்ளை தலைப்பை விஜய் படத்திற்கு வைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதத்தில் வரும் 14 ந் தேதி விஜய் வீட்டின் முன் போராட்டம் நடத்துவது! இந்த போராட்டத்திற்கு முறைப்படி போலீஸ் அனுமதி பெரும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.

வழக்கமாக விஜய் படம் முடிஞ்சவுடன்தான் பிரச்சனை வரும். இப்போ ஆரம்பிக்கும்போதேவா?

Leave A Reply

Your email address will not be published.