மைண்ட் யுவர் லாங்குவேஜ்! தனுஷ் கம்பெனியை அதிர விட்ட மடோனா

0


பழம் மட்டும் வேணும். ஆனா வேருக்கு வெந்நீர்தான் ஊற்றுவேன் என்கிற கொள்கையுடன் கோடம்பாக்கத்தில் கால் வைத்திருக்கும் நடிகைகளில் மடோனாவுக்கும் ஒரு சிறப்பிடம் ரெடி! கோடியா கோடியா சம்பளம் வேணும். ஆனால் எந்த பிரமோஷனுக்கும் வர மாட்டேன் என்று அடம் பிடிப்பது எந்த மாதிரியான டிசைன் என்பதை சம்பந்தப்பட்ட நடிகைகள்தான் விளக்க வேண்டும். தனது பட பிரமோஷனுக்கு கூட தனி பில் போட்ட ஹன்சிகாவெல்லாம், இன்று எங்கிருக்கிறார் என்பதை உணர்ந்தால் இந்த செருக்கு, தானாக நொறுங்கிவிடும் என்றாலும், யார் அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார்கள்?

விஷயம் இதுதான். ப. பாண்டி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மடோனா இப்போது எங்கிருக்கிறார் என்று யாராவது துப்புக் கொடுத்தால், கொடுத்தவருக்கு கோடி ரூபாய் கூட கொடுக்க தயாராக இருக்கிறது ப.பாண்டி படம் எடுத்த வுண்டர்பார் நிறுவனம். நாலாபுறமும் வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறார்களாம். இன்னும் சில தினங்களில் திரைக்கு வரப்போகும் அப்படத்தின் பிரமோஷன் ஆக்டிவிடிஸ்களில் பங்கெடுக்கதான் இந்த தேடல்.

இந்த பொண்ணு நல்லா நடிக்குது. மடோனாவே இருக்கட்டும் என்று ஆரம்பத்தில் முடிவு செய்த தனுஷ், படு சுமார் சம்பள அழகியான இவருக்கு 25 லட்சம் சம்பளம் கொடுத்து கமிட் பண்ணினாராம். ஒவ்வொரு முறை படப்பிடிப்புக்கு சென்னை வரும்போதும், தனது போக்குவரத்துக்கு ஆடிக் கார்தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறார். அதையும் கொடுத்திருக்கிறார்கள். அப்புறம் ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டல்தான் வேண்டும் என்று கேட்க, அதையும் கொடுத்திருக்கிறார்கள். இப்படி கேட்டதெல்லாம் கொடுத்தால், அவர்களை ஸ்மைலி லிஸ்ட்டில் வைத்து மிஸ்டர் இளிச் பட்டமும் கொடுத்துவிடுவதுதானே இயற்கை?

அதைதான் செய்திருக்கிறார் மடோனா. இவ்ளோ சம்பளம் வாங்குனீங்க? எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தோம். ஆனால் போன் அடிச்சா எடுக்க மாட்டேங்குறீங்களே? என்று எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டதாம். அதற்கு திருப்பி ரிப்ளை அனுப்பியிருக்கிறார் மடோனா. என்னவென்று?

‘மைண்ட் யுவர் வேர்ட்ஸ்’ என்று!

ஏம்பா… இன்னும் யாரெல்லாம் அக்காகிட்ட வாங்கிக் கட்டிக்கணும்னு ஆசைப்படுறீங்களோ, வந்து க்யூவுல நில்லுங்க!

Leave A Reply

Your email address will not be published.