இது கபாலி கலெக்ஷனுக்காக மோகன்லாலின் நன்றியுணர்ச்சி!

0

தமிழ் ஹீரோக்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா தெரியாது. ஆனால் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால், கபாலி படத்தின் கலெக்ஷனுக்காக செய்த நன்றி, ஞாலத்தின் மானப்பெரிது! (அப்படின்னா? உலகத்திலேயே ரொம்ப நல்ல விஷயம்ப்பான்றாரு திருவள்ளுவர்)

கபாலி படத்தின் கேரள ஏரியா உரிமையை வாங்கியிருந்தார் மோகன்லால். கிட்டதட்ட பத்து கோடி லாபமாம். அவருக்கு பத்து கோடி பெரிய விஷயம் இல்லையென்றாலும், வியாபாரம்… அதில் கிடைக்கும் கவுரவம்… என்ற வகையில் இந்த பத்து கோடி பெரிய விஷயம் ஆகிவிட்டது. இந்த கவுரவத்தை தந்த ரஜினிக்கு ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், சவுந்தர்யா ரஜினி ஒரு படம் இயக்கப் போவதாகவும் அதற்கு நல்ல புதுமுக இளைஞரை தேடிக் கொண்டிருப்பதாகவும் அறிய வந்தது.

அவர் காதுகளுக்கு விஷயம் போவதற்கும், சவுந்தர்யாவே லைனுக்கு வருவதற்கும் சரியாகவும் இருந்ததாம்.

“உங்க பையன் பிரணவ்வை தமிழ்ல நான் லாஞ்ச் பண்ணணும்னு நினைக்கிறேன்” என்று இவர் சொல்ல, எதிர்முனையில் சந்தோஷம் என்கிறார்கள். இதற்கிடையில் ‘தான் ஹீரோவாக அறிமுகம் ஆகிற படம் மலையாள படமாகதான் இருக்க வேண்டும்’ என்று பிரணவ் நினைக்க, ஒரு சின்ன ஸ்பீட் பிரேக்கர். கடைசியாக பிரணவ் மலையாளத்தில்தான் அறிமுகம் ஆகிறார். பாபநாசம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கத்தில்தான் இது நடக்கப் போகிறது.

அதற்கு முன் செய்நன்றிக்காக சவுந்தர்யா படத்திலும் முக்கிய ரோலில் நடிப்பார் என்கிறது லேட்டஸ்ட் தகவல்!

To listen audio click below:-

 

Leave A Reply

Your email address will not be published.