ராவெல்லாம் கண் விழிச்சு… மனம் நொந்து… அழுக்கு சட்டையோட அலைய விட்டு… ராகவா லாரன்சை மகிழ்வித்த மொட்ட ரிலீஸ்!

0

சமீபத்தில் ஒரு விழாவில் படம் தயாரிப்பது பற்றி இப்படி சொன்னார் இயக்குனர் மீரா கதிரவன். ஆண் பெண்ணா மாறி, காண்டா மிருகத்தை பிரசவிப்பது மாதிரி இருந்திச்சு… என்று! மொட்ட சிவா கெட்ட சிவா படம் சம்பந்தப்பட்டவர்களை கேட்டால், இதைவிட பயங்கரமாக கூட சொல்வார்கள் போலிருக்கிறது.

மொட்ட சிவா, கெட்ட சிவா படத்தின் தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் மதன் சிறைக்கு போய்விட்டார். ஆனால் படம் வெளியாக வேண்டுமே? அவருக்கு தனிப்பட்ட முறையில் கடன் கொடுத்தவர்கள், இந்த படத்தை மனதில் வைத்துக் கொண்டு கடன் கொடுத்தவர்கள், எல்லாரும் சேர்ந்து கொண்டு, எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணிக்கோ என்று முட்டுக்கட்டை போட… தினந்தோறும் இழுபறி. அதிகப்படியாக ரிலீஸ் தேதி அறிவித்து, அதிகப்படியாக தள்ளிப் போட்ட படமும் இதுதான்.

படத்தின் ஹீரோ லாரன்ஸ் தன் சம்பளம் ஐந்து கோடியை விட்டுக் கொடுத்து மேலும் பாதியை கையிலிருந்து கொடுத்தார். அப்பவும் இழுபறி. நீதிமன்றம் படத்தை விடுவிக்க உத்தரவிட்ட பின்பும் நேற்று இரவு டென்ஷன் பீவர் 108000 டிகிரிக்கும் மேல் போய் ஒரே கசா முசா. கடன் காரர்களில் ஒருவரான சிங்காரவேலன், படம் வெளியிடும் ரியல் இமேஜ் நிறுவனத்திற்கு லெட்டர் கொடுத்துவிட்டார். அப்புறமென்ன… ? விடிய விடிய பேசி காலையில் மொட்ட சிவா திரைக்கு வந்துவிட்டான்.

இந்த இழுபறி குறித்து இன்று மீடியாக்களை சந்தித்து நடந்த கதையை அப்படியே சொல்லப் போறேன் என்று கூறியிருக்கிறார் லாரன்ஸ். மறுபடியும் என்ன பூகம்பம் வருமோ?

Leave A Reply

Your email address will not be published.