விஜய் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் இசையமைப்பாளர்

0

மாத்தியோசி, குகன், கோட்டி போன்ற படங்களில் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளேன். கடந்த சில மாதங்களாக இறைவன் அருளால் யூடியூபில் எனது இணையதளமான ‘குருகல்யாண்ம்யூசிக்’ மூலம் தனிப்பாடல்களை வெளியிட்டு வருகிறேன். ‘குழந்தைகள்’ தினப்பாடல், ‘வீரத்தமிழன்’ எனும் ஜல்லிக்கட்டு பாடல், ‘பாடலாசிரியர் அண்ணாமலை’ அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடல், விவசாயம் தொடர்பான ‘வதுவை நன்மணம்’ எனும் தனிக்கவிதைக்கு பாடல் போன்றவை வெளியிட்டு வந்தேன். இதற்கு, இணையத்தளம் வாயிலாக சிறந்த வரவேற்பை பெற்றேன். அப்படியாக வெளிவந்த பாடலில் ஒன்றான “வதுவை நன்மணம்” எனும் பாடலுக்கு, நடிகர் விஜயின் ஆஸ்தான பாடலாசிரியரான பழநிபாரதி எழுதியிருந்ததால் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் கூடுதல் வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் அவர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இருக்கும் தனிச்சிறப்பை கண்டு வியந்து, அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், நெகிழ்ச்சியான தொடர்பை சொல்லும் வகையிலும் ‘இளையதளபதி ரசிகன் டா’ எனும் பாடலை உருவாக்க எண்ணினேன். மெட்டமைத்தவுடன் கவிஞர் பழநிபாரதி அவர்களையே இதற்கு பாடல் எழுதித்தரும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார். ‘கில்லி நாங்கடா சொல்லி அடிப்போம்’ எனும் இந்த பாடல் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ‘பெர்பெக்ட் விஜய் ஆன்தம்’ என்று ரசிக்கப்பட்டு வருகிறது. இப்பாடல் மேலும் அனைத்து ‘விஜய் ரசிகர்களுக்கும்’ சென்றடைய இந்த பத்திரிக்கை சந்திப்பின் மூலம் மதிப்பிற்குரிய பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தற்போது புதுதில்லியில் நடந்துவரும் விவசாயிகள் அறப்போராட்டத்தை ஆதரித்தும், இயற்க்கை நம்மை கைவிடாது என்று வலியுறுத்தியும் “விவசாயிகள்” எனும் பாடலை நாளை வெளியிட திட்டமிட்டுள்ளேன். இப்பாடலுக்கு “உமா ஷங்கர்’ எனும் புதுமுக இயக்குனர் காணொளி அமைத்து வருகிறார், கவிஞர் பழநிபாரதி பாடல் எழுதியுள்ளார். உமா ஷங்கருடன் ‘ஈஷா’ எனும் குறும்படத்தில் பணியாற்றினேன். திருக்குறள் 146ன் பொருட்கருவை கொண்ட இந்த குறும்படம் ‘தாதா சாஹேப் பால்கே’ எனும் குறும்பட விருது விழாவிற்கு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உமா ஷங்கருடன் இனைந்து “ஸ்ரீ சாயி பிலிம்ஸ்’ எனும் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் விரைவில் பணியாற்ற உள்ளேன். இந்த இசைக்கு அமெரிக்காவில் வசித்து வரும் எனது அண்ணன் ‘கல்யாண்’ அவர்கள், மேற்கத்திய இசைக்கோர்ப்புக்கும், இசை தொழில்நுட்ப நுணுக்கங்களுக்கும் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த அழைப்பை ஏற்று வந்த பத்திரிக்கை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

I have worked as music director for Tamil feature films like “Maathiyosi, Gugan and Kotti”. Oflate by God’s grace I have been releasing songs under my youtube banner “GuruKalyanMusic”. Starting with Children’s Day song, “Veera Thamizhan” a Jallikattu song, Tribute song to Lyricist Mr. Annamalai, “Vadhuvai NanManam” a poem converted to song were the songs released. All these songs were received well by the audience and that encouraged me to continue this venture. The song “Vadhuvai NanManam” written by Poet Mr. Palani Bharathi received a specific applause from “IlayaThalapathy Vijay Fans”, because they recognized Mr. Palani Bharati as one who wrote famous songs for Actor Vijay in his earlier days. I was surprised at the emotional connect that the fans have for their Idol, while I also understood that Ilayathalapathy too recognizes their love and appreciates them. Hence I wanted to do a song “IlayaThalapathy Rasigan Daa” for the Vijay fans, appreciating their emotional and unique connect. I was able to rope in Mr. Palani Bharati himself for this song. This song is released now, and is being appreciated as the ‘perfect Vijay Anthem for Vijay fans’ by group of Vijay fans. I request the press delegates to take this song and reach out to wider range of fans.

Further, supporting the protest of the Tamil farmers at New Delhi, I have worked a song and planning to release it tomorrow. The visuals for this song is being worked by Mr. Uma Shankar an upcoming Director, who worked under Mr. Raajeevan as Associate Art Director. This song is also penned by Mr. Palani Bharathi. I earlier worked a short film named “Isha” with Uma Shankar and this short film, that talks about the essence of “Thirukkural No 146” is sent for “Dada Saheb Film Festival’ award recognitions. Soon, I will be working on a feature film with Uma Shankar under the banner “Shri Sai Films’. My brother “Kalyan” who is living in USA, is an instrumental part in all the compositions, strings recordings and technical brilliance. I thank the press for their unconditional love and support.

Guru Kalyan:
www.youtube.com/gurukalyanmusic
https://twitter.com/GuruKalyanMusic

IlayaThalapathy Rasigan Daa Song link:

Leave A Reply

Your email address will not be published.