விஷால் பேச்சு எதிரொலி! மைசூரில் சிக்கிய சூர்யா படக்குழு! பதற்றம்… பரபரப்பு!

2

‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கேட்பது எங்க உரிமை… உடல் மண்ணுக்கு. உயிர் தமிழுக்கு’ என்று கர்நாடகாவில் முழங்கிவிட்டு வந்தாரல்லவா விஷால்? அவரது கார் சென்னை வந்து அதன் என்ஜின் சூடு ஆறுவதற்குள் சூடாகிவிட்டது கர்நாடகா! அவ்வளவுதான்… அங்கு நடக்கவிருந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் ரகளை.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று விஷால் பேசியதை அறியாத படக்குழு இன்று காலை மைசூரில் போய் இறங்க… இறங்கிய வேகத்தில் பட்டாசை பற்ற வைத்து உட்காருமிடத்தில் வைத்துவிட்டார்கள் கன்னட வெறியர்கள். இதற்கு முன் பல முறை இதே ஏரியாவில் சிக்கிக் கொண்டு அவஸ்தை பட்டிருக்கிறார்கள் பல தமிழ்ப்படக் குழுவினர். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்த சம்பவங்களும் உண்டு.

நல்லவேளையாக யூனிட் போய் சேர்ந்த பின், பின்னாலேயே பிளைட் பிடித்துப் போகவிருந்தார்களாம் சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள். கலவரம் பலமாவதற்குள் போன யூனிட் பதற்றத்தோடு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து கிளம்பவிருந்தவர்களும் பயணத்தை ரத்து செய்துவிட்டார்கள்.

விஷாலின் பேச்சுக்கு ஒருபக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், ‘சும்மா கிடந்த தேன் கூட்டுல கல்லை விட்டு கலவரத்தை ஏற்படுத்திட்டாரேப்பா…’ என்றும் முனக ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம்.

ஆவேசமா கொண்டைய முடியறதுக்குள்ள, இப்படி நாராசமா மண்டையில குத்துறானுங்களே….! அடுக்குமா இதெல்லாம்?

2 Comments
  1. SUBRAMANIAM says

    Did you know why Vishal spoke like that. Every one from Kanada film industry teased him about Cauvery water issue. So Vishal reacted for that speeches. If he didn’t reacted for that then every one in TN will curse Vishal. What vishal did is right and every one should appreciate it.

  2. Rajii says

    நிச்சயமாக விஷாலை பாராட்டியாக வேண்டும்.நிஜமாகவே தில் பேச்சுதான்.அங்க போய் பேச தைரியம் வேணும்
    இந்த விஷயம் சீமானுக்கு தெரியுமா .அவருதான் தமிழ்நாடுகு copyright வாங்கி வச்சிருக்கார்.

    அண்ணன் சீமான் அவர்களே கொஞ்சம் விஷால பாரட்டலாமே….

Leave A Reply

Your email address will not be published.