நமீதா பண்ணிய அசிங்கத்திற்கு அடுத்த பிறவியிலும் விமோசனம் இல்லை!

1

‘எல்லாம் ஸ்கிரிப்ட் மயம்’ என்று துவங்கிய பிக் பாஸ், இப்போது கை மீறிப் போய்விட்டது. கட்டுங்கடங்காத கடுப்பு. கவலையேற்படுத்தும் பிதற்றல் என்று ஆளாளுக்கு தனி ஆவர்த்தனம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். சினிமா மார்க்கெட் அவுட், ஆங்காங்கே கடை திறக்க அழைத்தவர்களும் நமீதாவின் பேராசை காரணமாக வேறு வேறு நடிகைகளை நாடிப் போய்விட, பிழைப்புக்கு மீண்டும் சூரத்திற்கே செல்லும் நிலை வந்துவிட்டது அவருக்கு. இந்த நேரத்தில்தான் ஓரளவுக்கு மனம் நிறைகிற சம்பளத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.

ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தவர், இப்போது தன் கிக்கிலி பிக்கிலி தமிழில் என்னென்னவோ உளறிக் கொண்டிருக்கிறார். (காயத்ரி ரகுராம் ஓவியாவை, ‘மூஞ்சும் முகரக்கட்டையும்’ என்று திட்ட, வாட் மூஞ்சு? வாட் முகரக்கட்டை? என்று சந்தேகம் கேட்டு ஆங்கிலத்தில் விளங்கிக் கொண்டதெல்லாம் செமக் காமெடி)

அது வரைக்கும் கூட ஓ.கே. ஆனால் ஓவியா இல்லாத நேரத்தில் அவர் பற்றி பேச ஆரம்பித்த நமீதா, “உங்களுக்கு தெரியுமா? அவளுக்கு கேன்சர் இருக்கு. அவ பேமிலி கேன்சர் பேமிலி” என்றார் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், கொடூரமான கேன்சர் நோய்க்கு தன் தாயை பலி கொடுத்திருந்தார் ஓவியா. அதுமட்டுமல்ல… அந்த கடைசி நேரத்தில் அம்மாவிற்கு பணிவிடை செய்யவும் சிகிச்சைக்காக பணம் புரட்டவும் அவர் பட்ட பாடு, இன்டஸ்ட்ரியில் சிலர் மட்டுமே அறிந்த சோகம்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் நமீதா ஓவியாவை அப்படி விமர்சித்தார். இன்று நம்மால் எறியப்படுகிற ஒவ்வொரு வார்த்தை நெருப்பும் நாளை நம் தலையிலேயே வந்து விழும் என்பதை துளி கூட அறிந்திராத நமீதாவை, இந்தப்பாவம் அடுத்த பிறவியிலும் துரத்தும். அதிலென்ன சந்தேகம்?

பாம்பு கடிச்சு பிழைச்சவனும் உண்டு. செருப்பு கடிச்சு செத்தவனும் உண்டு. எல்லாம் ஊழ்வினைம்மா ஊழ்வினை!

1 Comment
  1. sandy says

    இதே நமீதா வாய்தான், “கிருஷ்ணா எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருக்கு.. என்னை தப்பா பேசுனது பனிஷ்மென்ட் கொடுக்கும்.. ” என்றது.. இப்ப அதே பனிஷ்மென்ட் நாற நமிதாவுக்கும் கிடைக்குமில்லையா… ஆண்டவன் இருக்கான் நமி..

Leave A Reply

Your email address will not be published.