நயன்தாரா அப்படி செய்யக் கூடியவரா?

0

நடிகர் நடிகைகள் வந்து போகிற ஓட்டல்கள் என்றால், அதன் டேரிஃப்பில் ரிசர்வ் பேங்க் நெடி அடிக்கும்! பெரும் தொகையை பில்லாக போட்டு தில்லாக கல்லா கட்டுவார்கள். “அவங்களே வந்து தங்குறாங்கன்னா அப்புறம் என்னய்யா அந்தஸ்து வேணும்?” இப்படிதான் இருக்கிறது பயனாளிகளின் மனசு! ஆனால் நடிகைகளை தங்க வைப்பதால் இருக்கிற அவஸ்தை, சம்பந்தப்பட்டவர்களுக்குதானே தெரியும்?

சென்னை வடபழனியில் இருக்கும் அந்த நட்சத்திர ஓட்டலில் ஒரு நடிகை தங்கினார். (அவர் இறந்துவிட்டதால் பெயர் சொல்வது நாகரீகம் இல்லை) ஒரு காலை நேரம் அறையை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டார். சிறிது நேரத்தில் அறை வழியாக புகை வர, அலறி அடித்துக் கொண்டு கதவை உடைத்துப் பார்த்தால், கட்டில் பற்றிக் கொண்டு எரிகிறது. விஷயம் என்னவாம்? சிகரெட்டை பிடித்துவிட்டு அப்படியே பெட்டின் மீது எறிந்துவிட்டு கிளம்பிவிட்டார் நடிகை. அதற்கப்புறம் அவருக்கு ரூம் போட்டுக் கொடுத்திருந்த சினிமா கம்பெனியின் கழுத்தில் துண்டை போட்டு துட்டை வசூல் பண்ணியது ஓட்டல் நிர்வாகம்.

அதற்கப்புறம் எந்த நடிகை தங்கினாலும், செக்யூரிடி டெபாசிட் வசூல் செய்து கொண்டுதான் ரூமே தருகிறார்கள், இப்போதும்! சரி… விஷயத்துக்கு வருவோம். இப்போதெல்லாம் ஆந்திராவில் எந்த ஓட்டலில் தங்கப் போனாலும், நயன்தாரா என்றால் ரூம் இல்லை என்று கூறிவிடுகிறார்களாம் நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள். ஏன்? கோபம் வந்தால், கையில் கிடைப்பதை எடுத்து வீசுகிறாராம். இதன் காரணமாக உள்ளேயிருக்கிற கண்ணாடி, வாஷ் பேசின்கள் பல்லை பேர்த்துக் கொள்கின்றனவாம். தங்குகிற எல்லா ஓட்டல்களில் இத்தகைய நினைவு சின்னங்களை அவர் விட்டுச் செல்வதால், விஷயம் காட்டுத் தீயாக பரவி நயன்தாரா என்றால், “ஓட்டல் ஏழு நாளைக்கு விடுமுறை. அப்புறம் வாங்க” என்கிற அளவுக்கு அலர்ஜியாகிக் கிடக்கிறதாம் ஊர்.

‘சிவனே’ இருக்கிற இந்த நிலையிலும் இவ்ளோ ஆங்காரம் ஆகாது தாயீ….

Leave A Reply

Your email address will not be published.