கொலைகாரனுடன் நயன்தாரா! கேரளாவில் பரபரப்பு!

0

தேளை அடிக்க தடியை எடுத்தால், அந்த தடியில் சுற்றியிருக்குதாம் பாம்பு. அப்படியொரு டபுள் அதிர்ச்சியில் இருக்கிறது மல்லுவுட்! நடிகை பாவனா பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி படு சோகத்தில் இருக்கிறார். கிட்டதட்ட ஏழு பேர் இந்த வன் கொடுமையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறுகிறது போலீஸ் வட்டாரம். நடிகைதானே… வெளியே சொன்னால் இமேஜ் போய்விடும். அதனால் சொல்ல மாட்டார். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை காட்டி காட்டியே ஏகப்பட்ட கோடிகளை கறக்கலாம் என்று திட்டமிட்ட கொடூரர்கள் இப்போ உள்ளே.

ஆனால் இதை கூட்டணி போட்டு செய்தவர்கள், யார் தூண்டுதலில் செய்தார்கள்? யாரெல்லாம் குற்றப்பின்னணியில் இருக்கிறார்கள் என்றெல்லாம் அலசி ஆராய்ந்த போலீசின் கண்களிலும் விசாரணையிலும் சிக்கியவர்களில் முக்கியமானவர் நயன்தாராவின் கார் டிரைவர் சேது.

இவருக்கும் பாவனா விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் பிரபல நடிகைகளின் கார் டிரைவர்கள் யார் யார்? அவர்களுக்கு குற்ற பின்னணி இருக்கிறதா என்று ரகசியமாக நோட்டமிட்ட போலீசுக்கு கிடைத்த தகவல்தான் ஷாக். இந்த சேது சில வருடங்களுக்கு முன் கொலை வழக்கில் சிக்கி சில வருடங்கள் கம்பி எண்ணியவராம்.

இந்த விஷயம் தெரிந்தோ தெரியாமலோ தனக்கு கார் டிரைவராக அவரை நியமித்திருக்கிறார் நயன்தாரா. இதில் கொடுமை என்னவென்றால், இவர் நயன்தாராவின் கார் டிரைவர் மட்டுமல்ல. அந்தரங்க பாதுகாப்பாளரும் கூடவாம். சமீபத்தில் நயன்தாராவின் கேரள வீட்டில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்தது. அப்போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை ஓடவிட்டு தாக்கினாராம் இந்த சேது.

இவரது குற்றப் பின்னணி பற்றி நயன்தாராவுக்கு சொல்லியிருக்கிறது போலீஸ். அவர் என்ன முடிவை எடுக்கப் போகிறாரோ?

Leave A Reply

Your email address will not be published.