நயன்-சிவன் போப் தரிசனம்! ரோமில் எடுக்கப்பட்ட புது செல்ஃபி?

0

கவலைப்பட்ட காலத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறது தமிழ், தெலுங்கு ஹீரோக்களின் மனசு! கிளி பறந்து போச்சு. போன இடத்திலேயாவது பிரச்சனையில்லாம இருக்கட்டும்… என்று மனசை தேற்றிக் கொண்டு, அடுத்த சிட்டுக்குருவிக்கு அலைபாய ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் மனசில் ஓரத்தில் இருக்கும் நெருப்பு எந்த நேரத்தில் மாளிக்கைக்கு தீ வைக்குமோ? இந்த வருட நயன்தாரா பிறந்த நாளுக்கு ஒரு ஹீரோ கூட போன் பண்ணி அவரை வாழ்த்தவில்லை என்பதிலிருந்தே புரிந்திருக்கும் அந்த நெருப்பின் அடர்த்தி!

“பீ கூல் மச்சி…” என்று எதற்கும் கவலைப்பட்டு பழக்கமில்லாத நயன், தன் காதலர் சிவனுடன் ரோம் நகருக்கு பறந்து விட்டார். கிட்டதட்ட ஏழாயிரத்து சொச்சம் கி.மீட்டரை வானத்தில் பறந்து அனுபவித்த நயன் சிவன் ஜோடி, வாடிக்கன் நகருக்கு சென்று போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றிருக்கிறார்கள்.

ஒரு இயக்குனர் பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஒன்றும் தமிழ்சினிமா புதுசாக பார்க்கும் விஷயமல்ல. ஆனால் இதற்கு முன் இல்லாத பரிசுத்தம் இந்த காதலில் இருக்கிறது எப்படி? அதற்கு பழைய காதல் ஒன்றை உதாரணம் சொன்னால்தான் புரிந்து கொள்ள முடியும். சுமார் 15 வருஷத்துக்கு முன் டாப்பில் இருந்த அந்த ஹீரோயின், திடீரென தன் படத்தின் இயக்குனரிடம் ஐ லவ் யூ சொல்ல, வழக்கமான ஒன் டே மேட்ச்தான் போலிருக்கு என்று அவரும் அசால்ட்டாக உம்… சொன்னார். அதற்கப்புறம்தான் இது கல்யாணம் வரைக்கும் போகக் கூடிய ஆசை என்று புரிந்ததாம் அவருக்கு. இருந்தாலும் ஒரு டவுட்.

“நான் இப்பதான் போராடி ஒரு இடத்துக்கு வந்திருக்கேன். உன்னைய நம்பி எல்லாரையும் பகைச்சுகிட்டா எனக்கு எவனும் கால்ஷீட் கொடுக்க மாட்டான். என் லைஃபுக்கு செக்யூரிடியாக ஒரு பெரிய பங்களா வாங்கிக் கொடு. உன்னை நம்புறேன்” என்றார் டைரக்டர். தன் காதலை உறுதி செய்ய அந்த கால மதிப்பில் இரண்டு கோடிக்கு ஒரு பங்களா வாங்கிக் கொடுத்து அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பின்புதான் காதலுக்கு ஓ.கே சொன்னார் டைரக்டர். கல்யாணமும் பண்ணிக் கொண்டார்கள். இன்று சொசைட்டியில் ரெண்டு பேருமே டாப்!

கிட்டதட்ட அதே போன்றதொரு காதல்தான் இதுவும். ஆனால் விக்னேஷ் சிவன் எவ்வித டிமாண்டும் வைக்காததுதான் இன்னும் இன்னும் என்று மூச்சு முட்ட வைக்கிறது நயன்தாராவை!

போப் மட்டுமா ஆசிர்வதிக்கிறாரு? நாங்களும்தான்மா…!

குறிப்பு- ஜன்னல் வழியா பின்னாடி பாருங்க. ரோம் நகரத்து கட்டிங்கள் தெரியுதா?

Leave A Reply

Your email address will not be published.