நயன்தாரா என்ன செய்தாலும் ஆஹா… வொண்டர்புல்!

0

நயன்தாராவிடம் அப்படி என்னதான் இருக்கிறதோ? அவர் எது செய்தாலும் ஆஹா… வொண்டர்புல்… என்று கொண்டாடவும் கூத்தாடவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. அதையெல்லாம் மனதில் வைத்துதான் கோடிகளை அள்ளி அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே.

‘இமைக்கா நொடிகள்’ படமும் அப்படி கோடிகளை கொட்டிவிட்டு, கைதட்டல்களை அள்ளுவதற்காக காத்திருக்கும் படம். இந்தப்படத்துல நயன்தாராவின் சம்பளம் நாலு கோடியாமே? என்று கேட்டால், ஒரு நமுட்டு சிரிப்போடு ஒதுங்கிக் கொள்கிறார் படத்தின் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார். (இன்கம்டாக்ஸ்?)

‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கி, முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் இயக்குனர் என்ற நம்பிக்கையை பெற்ற அஜய் ஞானமுத்து இயக்கும் படம்தான் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப்படத்தில் அதர்வா மருத்துவராகவும், நயன்தாரா சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் வருகிறாராம். நயனுக்கு இருக்கிற பில்டப்புக்கு தெறிக்க தெறிக்க ஒரு பைட் காட்சி வைத்திருக்கலாம் அல்லவா? நாடு முழுவதுமிருக்கும் நயன் ரசிகர்கள் சார்பாக இக்கேள்வி கேட்கப்பட…. “இல்ல சார். அவங்களுக்கு ஒரு ‘கன் ஷுட்’ ஷாட் மட்டும் இருக்கு. மற்றபடி பைட்டெல்லாம் இல்ல” என்றார் அஜய் ஞான முத்து.

ஒரு ‘லைக்’ அல்லது ‘மோஸ்ட் லைக்’ மேட்டர். இந்தப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். “மொத்தமே பத்து நிமிஷம் வந்தால் அதிகம். ஆனால் தியேட்டரே ரணகளப்படும்” என்றார் டைரக்டர்.

அதைவிட இன்னொரு விஷயம். படத்தில் அனுராக் காஷ்யப் நடித்திருப்பதும்தான்.

நொடிப் பொழுதும் இமைக்கா வண்ணம் ரசிக்க வைக்க இன்னும் யாரெல்லாம் உள்ளே வருவார்களோ?

Leave A Reply

Your email address will not be published.