இறங்கி வந்த தாரா! இதுதாண்டா டோரா!

0

நல்லவேளை… அதிகம் படிக்கவில்லை நயன்தாரா! படிச்சிருந்தா ஒரு கிளாசிலிருந்து இன்னொரு கிளாசுக்கு பிரமோஷன் ஆவதை கூட விரும்பியிருக்க மாட்டார். ஏன்யா… ஏன்? அவருக்குதான் பிரமோஷன்னாலே பிடிக்காதே? இப்படி தன்னை சுற்றி ஒரு இமேஜ் வட்டத்தை போட்டுக் கொண்ட நயன், அவரே விழுந்து விழுந்து நடித்த படத்தின் பிரமோஷன்களை கூட புறக்கணிப்பதை சற்றே கொள்ளிவாய் கண்ணோடு கவனித்து வந்த கோடம்பாக்கமே… இந்தா புடிச்சுக்கோ இனிப்பை!

தன் கொள்கையை சற்றே தளர்த்திக் கொண்டிருக்கிறார் அவர். இம்மாதம் 31 ந் தேதி திரைக்கு வரப்போகும் டோரா படத்திற்காக ஒரு பிரமோஷன் ஐடியாவை சொன்னதாம் அப்படத்தை வெளியிடுகிற ஆரா சினிமாஸ். படத்தில் வரும் பேய் கார் வடிவத்தில் பல கார்களை உருவாக்கி அவற்றை சென்னையிலிருக்கும் மிக முக்கியமான மல்டிபிளக்ஸ் திரையரங்க வாசலில் நிறுத்தி வைப்பார்களாம். அந்த காருடன் ரசிகர்கள் தனித்தனியாக செல்பி எடுத்து இந்த ஆரா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தால்…?

வச்சா வச்சா வச்சா?

அதில் சிலரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அதே காரில் நயன்தாராவுடன் அவர்களை செல்பி எடுத்துக் கொள்ள அனுமதிப்பார்களாம். இந்த திட்டத்தை மனசார வரவேற்று சம்மதம் சொன்ன நயன், முதன் முறையாக தனது பிரமோஷன் கொள்கையை தளர்த்தியிருப்பதால் கோடம்பாக்கம் நிம்மதியாகியிருக்கிறது.

அப்படியே மெள்ள வழிக்கு கொண்டு வாங்க! சினிமா பிழைக்கட்டும்…

Leave A Reply

Your email address will not be published.