இமைக்கா நொடிகள் பஞ்சாயத்து! என்ன செய்தார் நயன்தாரா?

0

ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் அனகோன்டாவிடம் சிக்கிய ஆடு போலாகிவிடுகிறார்கள் தயாரிப்பாளர்கள். ‘இமைக்கா நொடிகள்’ வெளியீடு இன்னும் மோசம். நாலாபுறத்திலும் சிக்கி சட்னியாகிவிட்டார் தயாரிப்பாளர். எல்லாம் அவரே இழுத்துக் கொண்ட வினை என்றாலும், கடைசி நிமிஷம் வரைக்கும் கடா முடா எபெக்ட்தான். தமிழகம் முழுக்க அறிவிக்கப்பட்ட நாளில் படம் வரவில்லை. போகட்டும்….

அந்த நேரத்தில் யாரெல்லாம் உதறினார்கள்? யாரெல்லாம் பதறினார்கள்? முக்கியமாக வர வேண்டிய தொகையை விட்டுக் கொடுத்தது யார்? என்றெல்லாம் கணக்கெடுத்துப் பார்த்தால், முதலில் வந்து முக வணக்கம் போடுகிறார் நயன்தாரா.

முக சுணக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் முக வணக்கமா? அதான்யா பண்பு….

அவர் மூன்று கோடி சம்பளம் வாங்குவதாக தகவல். இப்படத்திற்கும் அதுவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரிலீஸ் நேரத்தில் தருவதாக சொல்லி 75 லட்சத்தை நிறுத்தி வைத்துவிட்டார் தயாரிப்பாளர். ரிலீஸ் நேரத்தில் கொடுக்கிற நிலைமையிலா இருந்தார் அவர்? டேபிள் லாஸ்சே ஆறு கோடி என்கிறார்கள். இந்த லட்சணத்தில் எங்கிருந்து வரும் எழுபத்தைந்து லட்சம்?

கேட்கவே வேணாம் விட்ருங்க என்று கூறிவிட்டாராம் நயன்தாரா. மொட்டை வெயில்… சொட்டு தண்ணி நாக்குல விழுந்த மாதிரி சந்தோஷப்பட்டிருப்பாரே தயாரிப்பாளர்? இருக்காதா பின்னே….

Leave A Reply

Your email address will not be published.