சந்தேகம்! கீர்த்தி சுரேஷால் புயல் வீசுமா நயன்தாரா வாழ்வில்?

0

வாளி நிறைய பஞ்சாமிர்தம் இருந்தாலும், வாய்க்கு ருசியா வேறொன்னு இருக்கான்னு தேடுறதுதானே மனுஷ மனசு? அப்படியொரு மனசு நம்ம விக்னேஷ் சிவனுக்கும் வந்திருச்சோ என்று அச்சப்பட ஆரம்பித்திருக்கிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’ பட யூனிட்! குறிப்பா சூர்யாவே சமயங்களில் டென்ஷன் ஆகுற அளவுக்கு நிலைமை தகறல்… குதறல்!

என்னய்யா… என்னாச்சு? இந்தப்படத்தில் நயன்தாரா ஹீரோயின் இல்லை என்பதுதான் முழு முதற் காரணம்.

விக்னேஷ் எப்போ தலையெடுக்க ஆரம்பிச்சாரோ? அப்பவே குக்கரும் விசிலும் போல ஒன்றாகிவிட்டார்கள் இருவரும். எங்கு போனாலும் நயன்தாராவும் இருப்பார். இவருக்கு கதை சொல்லப் போனால், காதுகளை தீட்டிக் கொண்டு விக்னேஷ்தான் இருப்பார் அங்கே. இப்படி ஒண்ணுக்குள் ஒண்ணாகிவிட்ட ஜோடி, இந்தப்படத்தினால் பிரிந்திருக்கிறது இப்போது.

நயன்தாராவே நடிக்கட்டும் என்ற விக்னேஷ் சிவனின் ஆசையில் முதல் கண்டிஷனை போட்டு காலி பண்ணினார் சூர்யா. “இந்தப்படத்தில் அவங்க இல்லேன்னாதான் உங்களுக்கு கால்ஷீட்” என்று சொல்லப்பட்டுவிட்டது. போகட்டும்… ஷுட்டிங் கதைக்கு வருவோம்.

நயன்தாரா இல்லாத இந்த நேரத்தில்தான் அந்த முரட்டு மன்மதன், மெல்ல விக்னேஷ் மனசுக்குள் புகுந்து வில்லங்கம் பண்ண பார்க்கிறான் என்கிறது யூனிட். எந்நேரமும் கீர்த்தி சுரேஷுடன் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் விக்னேஷ், அவர் இல்லாமல் ஒரு சீன் கூட படத்தில் இருக்கக் கூடாது என்பது போலவே நடந்து கொள்கிறாராம். ஸ்கிரிப்ட்படி அப்படியிருந்த காட்சிகளை கூட கடைசி நேரத்தில் மாற்றி, எல்லா சீன்களிலும் கீர்த்தி சுரேஷை நுழைத்திருக்கிறார்.

சூர்யா தனியாக வருகிற காட்சிகளில் கூட, திடீரென கீர்த்தியும் ஒட்டிக் கொள்வதால்… “சீன்ல இப்படி இல்லையே? பிறகெப்படி?” என்று குழம்பிப் போகிறாராம் சூர்யா.

இனி பொறுப்பதில்லை என்று ‘ரகசிய நோட்’ போட்டு நயன்தாராவுக்கு அனுப்பி வருகிறார்களாம். அவரும் தன் கண்காணிப்பு வளையத்தை இறுக்கியிருக்கிறாராம். பார்க்கலாம்… கள்ளக் காதல் ஜெயிக்குதா? கண்காணிப்பு ஜெயிக்குதா? என்று!

Leave A Reply

Your email address will not be published.