போராட்டக் களத்தில் நயன்தாரா!

1

மாநில அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திருத்தத்தையும் மாணவர்கள் ஏற்கவில்லை. ஆறு மாதங்களுக்கு மட்டுமே இந்த சட்டம் செல்லும். அதற்கப்புறம் மீண்டும் பழைய தண்ணி… பார்த்துக் குடி கதையாகிவிட்டால் என்னாகும்? என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் போராட்டக்காரர்கள். ஆகவே இன்னும் போராட்டம் பெரும் எழுச்சியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று பல வியக்கத்தக்க சம்பவங்கள் அரங்கேறிவிட்டன.

நடிகர் விஜய் தன் முகத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு வந்து கூட்டத்தின் நடுவே அமர்ந்துவிட்டார். சூர்யா, ராகவேந்திரா லாரன்ஸ், கார்த்தி போன்ற நடிகர்கள் வந்தபோதெல்லாம் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இவர் மட்டும் ஏன் கர்சீப் கட்டிக் கொண்டார்? இவர் மீது விழுந்து புரண்டு ஆட்டோகிராப் கேட்கிற மன நிலையில் ஒரு இளைஞரும் இல்லையே அந்தக் கூட்டத்தில்? என்றெல்லாம் கமென்டுகள் பறக்க… சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினார் விஜய். இருந்தாலும் அவரது நேரடி விசிட்டுக்கு மனதார பாராட்டுகளை தெரிவித்தார்கள் இளைஞர்கள்.

இந்த நிலையில்தான் நடிகை நயன்தாரா எவ்வித முகமூடியும் அணிந்து கொள்ளாமல் நேரடியாக போராட்ட களத்திற்கு வந்தார். மாணவிகளோடு மாணவியாக அவரும் வந்து அமர்ந்தது இளைஞர்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தது. மற்ற சந்தர்ப்பங்கள் போல, அவருக்கு எவ்வித தொந்தரவையும் யாரும் கொடுக்கவில்லை என்பதுதான் மிக மிக சிறப்பான விஷயம்.

எல்லா நேரத்திலும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்கள் போராட்ட களத்திலிருக்கும் இளைஞர்கள்.

1 Comment
  1. ramesh says

    Keep it up nayan. Nayan partcipately silently as a ordinary person without any attention getting speeches etc. Could nayan tell vignesh and surya to fire that radio comedian from their movie. When kamal, surya, Ajit, rajini all of them are participating without making any noise, this radio comedian tried to steal the show from youngstars by thondai Kalyan pesi in marina. When entire kollywood is remaining in backdrop, so youngsters carry forward the fight, what is the need for radio rj comedian to do drama? All top heros should avoid casting this radio rj comedian in their movies, because he beats his own drums sepeately and spoils entire orchestra.

Leave A Reply

Your email address will not be published.