லாரன்சுக்கு ஒரு நீதி! நயன்தாராவுக்கு ஒரு நீதியா?

1

வளசையார்… (வளசரவாக்கத்துல கெத்து காட்றவராம்) புரசையார்… (புரசைவாக்கத்துல கெத்து காட்றவராம்) இப்படி வட்டச் செயலாளர்களான வண்டு முருகன்கள் விதவிதமான பட்டப்பெயர்களோடு திரியும் நாட்டில், சினிமாக்காரர்களுக்கு மட்டும் இந்த மாதிரி ‘பட்டங்கள்’ விஷயத்தில் படு தட்டுப்பாடு! இன்னொரு ஹீரோவின் பட்டப் பெயரை பறித்துக் கொள்வதால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் வெந்நீர் பானையில் விழுந்த மாதிரியே எபெக்ட் கொடுக்கிறார்கள்.

போன வாரம் கூட ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் போட்டுக் கொண்ட லாரன்சை விட்டு விளாசியது சோஷியல் மீடியா! இவரும் பயந்து போய், படத்தின் டைட்டில் கார்டிலிருந்தே அந்த பட்டத்தை நீக்கியதுடன், ரஜினியை நேரில் சந்தித்து மன்னிப்பும் கேட்டார்.

இது லாரன்சின் பக்குவத்தைதான் காட்டுகிறது. நல்ல விஷயம். ஆனால் இதே சினிமா ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாளில் திரைக்கு வரப்போகும் நயன்தாராவின் டோரா திரைக்கு வந்தால் என்ன பண்ணப் போகிறார்களோ? ஏன்?

அந்தப்படத்தில் நயன்தாராவுக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இது நயன்தாராவுக்கு தெரியுமா? தெரிந்தால் அனுமதிப்பாரா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருந்தாரே… லாரன்ஸ். அவர் ஸ்டைலில் அமைதி காப்பாரா? இப்படி ஆயிரம் கேள்விகள் எழுந்துள்ளன.

லாரன்ஸ் விஷயத்தில் கோபப்பட்ட ரசிகர்கள், நயன்தாராவை என்ன பண்ணப் போகிறார்களோ?

1 Comment
  1. Mohammed Anez says

    ONE & ONLY SUPER STAR RAJINI RAJINI RAJINI.

Leave A Reply

Your email address will not be published.