கர்சீப் கொடுத்தாலும் அணிவோம்! ஆனால் காசுக்காகதான்னு சொன்னா கோவம் வரும்!

1

“கதைக்கு தேவைப்பட்டால் டூ பீஸ் கூட அணிவோம். ஆனால் காசுக்காகதான் அப்படி நடிச்சாங்கன்னு சொன்னா, அதை ஏத்துக்க முடியாது…” இப்படி போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்கள் நயன்தாராவும் தமன்னாவும்! (பில்லா படத்தில் நயன்தாரா அணிந்த டூ பீஸ்சுக்கும், கதைக்கும் என்னங்கடா சம்பந்தம்?, கத்தி சண்டை படத்தில் தமன்னாவின் துக்குணூன்டு துணிக்கும் கதைக்கும் என்னங்கடா சம்பந்தம்?)

‘கத்தி சண்டை’ படம் தொடர்பாக பேட்டியளித்த டைரக்டர் சுராஜ், “கோடிக்கணக்குல சம்பளம் வாங்குற நடிகைகள், கொடுக்கிற டிரஸ்சை போட்டுட்டு வந்து நடிக்கணும். இவங்க நடிப்பை பார்க்கவா ரசிகன் தியேட்டருக்கு வர்றான்? இவங்களோட அரைகுறை அழகை பார்க்கதான் வர்றான்” என்று ‘ஓப்பனர்’ வைத்து திறந்துவிட்டார் பிரச்சனையை. இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வீடியோவாக வர…. பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள் நயன்தாராவும் தமன்னாவும்.

முதலில் பொங்கியவர் நயன்தாராதான். “தன் கருத்துக்காக உடனே சுராஜ் மன்னிப்பு கேட்கணும்” என்றார். சரி, அதோடு விட்டாரா? “உங்க அக்கா தங்கையிடம் இப்படி சொல்வீங்களா?” என்றும் கேட்டார். (சுராஜின் அக்கா தங்கைகள் இப்படி டூ பீஸ் போட்டுக் கொண்டு ஊரே பார்க்கிற மாதிரி நடிக்கிறார்களா என்ன?) தமன்னா இன்னும் ஒரு ஸ்டெப் ஏறி நின்று கொண்டார். “நான் அந்த பேட்டியை பார்க்கும்போது தங்கல் படம் பார்த்துகிட்டு இருந்தேன். மேற்கொண்டு படம் பார்க்கவே தோணல. வீட்டுக்கு வந்துட்டேன். பெண்களை உயர்வா மதிக்கிற படம் தங்கல். ஆனால் பெண்களை இவ்வளவு இழிவா பேசியிருக்கிற சுராஜ், உடனே மன்னிப்பு கேட்கணும் என்றார்.

நமது டவுட்டெல்லாம் இதுதான். அந்த டூ பீஸ் டிரஸ்சை கொடுக்கும் போது சந்தோஷமாக வாங்கி மாட்டிக் கொண்ட நீங்கள், இப்போது பொங்குவது ஏன்?

கடைசி நேர நிலவரம் என்ன? தான் நெருக்கப்படுவதை உணர்ந்த சுராஜ், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டார். “நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. என் கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறி பிரச்சனையை முடித்து விட்டார்.

கழுதைக்கு பசிச்சா சலவை துணியைக் கூட மென்றுவிடும். சலவைக்காரர்தான் ஜாக்கிரதையா இருக்கணும். இனிமே அப்படியே இருங்க சுராஜ்!

1 Comment
  1. Broker says

    ven padam potta, rentaiyume pottavan yennakku terinchu chenailaye 15-20 per irrupaan. hyderbadula thriple adi adichirupaanunga. vanthutaaliga..

Leave A Reply

Your email address will not be published.