படம் ஓடுனதுக்கு காரணம் வைரமுத்துவாம்! அட பொய்யர்களா?

1

அண்மையில் திரைக்கு வந்து நல்ல பட விரும்பிகள் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘நெடுநல் வாடை’! இந்தப்படம் ஏன் அனைவரையும் கவர்ந்தது என்று யாரிடம் கேட்டாலும், கதையும் அந்த கதைக்கு பொருத்தமான நடிகர்களும், அவர்களின் அப்பழுக்கில்லாத நடிப்பும்தான் என்பார்கள். முக்கியமாக படத்தில் தன் நடிப்பையும் அழகையும் கொட்டி கொட்டி கோலம் போட்ட அஞ்சலி நாயர்தான் காரணம் என்பார்கள். ஆனால் இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் இதையெல்லாம் மறைத்து ஒரு பிம்பத்தை பூசிக் கொண்டிருந்தார்கள் படக்குழுவினர்.

அது? வைரமுத்துவின் வரிகள்தான் இந்தப்படம் ஓடவே காரணமாம். அடப்பாவிகளா? இந்தப்படத்தை ரசித்தவர்களை விடுங்கள். நேற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களிடம், ‘வைரமுத்து இந்த படத்திற்காக எழுதிய வரிகளை சொல்லுங்க’ என்று நாலு பேரிடம் கேட்டால் அதில் மூன்று பேர் திக்கி திணறியிருப்பார்களே…

நிஜம் இப்படியிருக்க, ஏன் வைரமுத்துவால் மட்டுமே இந்தப்படம் ஓடியது என்கிற பிம்பத்தை விதைக்க வேண்டும்? அதுதான் புரியவில்லை.

வைரமுத்துவின் நல்ல நல்ல வரிகளை கொன்று தின்று போட்ட இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவரது வரிகளை தனித்தனியாக புரிய வைத்த இசையமைப்பாளர்களும் இருக்கிறார்கள். அப்படி வந்த பல படங்கள் உப்புமா படங்களை விடவும் கேவலமாக தோற்றிருக்கின்றன. அப்படியிருக்க… தன் கதை, திரைக்கதை, வசனம், நடிகர் நடிகைகள் தேர்வு இவற்றால்தான் இந்தப்படம் ஓடியது என்பதை அப்படத்தின் இயக்குனரே நம்பாத போது, இதைவிட துரதிருஷ்டம் வேறென்ன இருக்க முடியும்?

இருந்தாலும், நேற்றைய நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பேச்சு, அல்டிமேட்!

இயக்குனர் செல்வகண்ணனுக்கு ஒன்றே ஒன்று. கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பதை கருணாஸ் போன்ற காமெடியன்கள் நம்பலாம். நீங்கள் நம்பலாமா?

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Gnaavel says

    Indha virus muttuve oru pachchondhi. Ivan senra idamellaam aamai pukundha veedu aanathu. Ivanaal padam odukirathaa? Kevalam.

Leave A Reply

Your email address will not be published.