நெப்போலியன் அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷல் ட்ரிப் அடிச்சது ஜெயப்ரதாவுக்காகதானா?

0

சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதாவை இப்போது நினைத்தாலும், மனசுக்குள் ஒரு குயில் வந்து கிளையை போட்டு ஆட்டோ ஆட்டென ஆட்டும். 80 களில் இளமையாக இருந்த எல்லாரையும் பித்துபிடிக்க வைத்த ஜெயப்ரதா, ஐயோ பாவம். நெப்போலியனை மட்டும் விட்டுவிடவா போகிறார்?

விரைவில் வெளியாகவிருக்கும் ‘யாகம்’ என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அதுவும் புருஷன் பொஞ்சாதியாக! நரசிம்மா இயக்கியிருக்கும் இப்படத்தின் பட்ஜெட் 35 கோடி. (சும்மாவா? இந்த நரசிம்மா ஷங்கரின் அசிஸ்டென்ட்டாக்கும்? ஹம்… இதெல்லாம் ஊது வத்தி கேட்டா, சந்தனக்கட்டை கொடுக்கிற கோஷ்டி)

கடந்த சில வருடங்களாகவே அரசியல், சினிமா இரண்டையும் தவிர்த்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். அவரது அன்பு மகனுக்கு ஏற்பட்டிருக்கும் நோயை தீர்க்கதான் இந்த முடிவு. ஆனாலும் நேரம் கிடைக்கும் போது இங்கு வந்து சில படங்களில் நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிக்க நரசிம்மா அழைத்தபோது, ஸாரிங்க. நான் எங்க வர்றது என்றாராம்.

உங்களுக்கு ஜோடி ஜெயப்ரதா என்று கூறிய டைரக்டர், அப்படியே போனிலேயே கதையை சொல்ல, பொசுக்கென ஒப்புக் கொண்டிருக்கிறார் நெப்ஸ். இந்தப்படத்தின் பிரஸ்மீட்டுக்காக சென்னை வந்த நெப்போலியன், ஜெயப்ரதாவை மேடையில் வைத்துக் கொண்டே வழிந்தது, முதல் மரியாதை சிவாஜி ராதாவையே ஞாபகப்படுத்துகிற அளவுக்கு கெட்டி.

நாங்கள்லாம் பார்லிமென்ட்ல ரெண்டே ரெண்டு பெண் எம்பிகளை மட்டும் வச்ச கண்ணு மாறாம ஏக்கத்தோடு பார்ப்போம். ஒண்ணு ஜெயப்ரதா, இன்னொன்று ஹேமமாலினி. அப்போதெல்லாம், இவங்க ஹீரோயினா இருந்த காலத்தில் நம்மளால நடிக்க முடியாம போச்சேன்னு மனசு ஏங்கும். அந்த ஏக்கத்தை தீர்த்து வச்சுட்டார் நரசிம்மா என்று ஓப்பனாகவே அடித்துவிட்டார் நெப்போலியன்.

வயசு எத்தனை ஆனால்தான் என்ன? மனசு அப்படியே இருந்தா இப்படிதான்!

Leave A Reply

Your email address will not be published.