இப்படியே போனா அடுத்த ஜெ. நீங்கதான்! நயனுக்கு குவியும் பாராட்டுகள்!

1

இன்று வெளியாகிவிட்டது அறம்! மெல்ல மெல்ல தனது தனித்தன்மையை நிலைநாட்டி கோடம்பாக்கத்தின் அழிக்க முடியாத பெண் சக்தியாக மாறிவிட்டார் நயன்தாரா. அவரை முழுக்க முழுக்க பில்டப் செய்து எடுக்கப்பட்ட படம்தான் இது. சில தினங்களுக்கு முன் கோடம்பாக்கத்திலிருக்கும் தனது நட்பு வட்டத்திற்கு மட்டும் ‘அறம்’ படத்தை திரையிட்டு காண்பித்திருக்கிறார் நயன்தாரா.

அந்த ஷோவுக்கு தான் வருவதை மட்டும் கவனமாக தவிர்த்தாராம். ஆனாலும் வெளியே வந்த அத்தனை கண்களும் தேடிய ஒரே முகம் நயன்தாராவினுடையதுதான். காணாமல் ஏமாந்தவர்கள் உடனே நயன்தாராவுக்கு போன் அடிக்க தவறவில்லை. ‘படம் பிரமாதம். இதே மாதிரி இன்னும் நாலு படத்துல நடிச்சா, நீங்கதான் அடுத்த  ஜெ.’ என்று அவர்கள் கூறியதை காது கொள்ளாமல் கேட்டு கண்கலங்க நன்றி தெரிவித்தாராம் நயன்.

‘நீங்கதான் நெக்ஸ்ட் ஜெ.’ என்பதெல்லாம் பெரிய வார்த்தையாக இருந்தாலும், ஒரு படம் இவ்வளவு தூரம் பேச வைத்திருக்கிறதே… என்று நினைத்து நினைத்து பெருமைப்பட்டாராம் நயன்.

போற போக்குல மவுன்ட் ரோட்டுல சிலை வச்சு, பிறந்த நாள் அன்னைக்கு கோஷம் போடுவாங்களோ?

1 Comment
  1. Vallawaa says

    People need to understand she is an actress, not a noble leader. She has done a very good job in Aram. Let us congratulate her on that. When she is doing so good in movies, why gets distracted involving with cheap like Viral Kambu, Thaadi Dancer, now road side third class naanum rwoythaan. Nyan should find someone good, not these.

Leave A Reply

Your email address will not be published.