உதவி செய்யறது தப்பா கோ…ப்பால்? சூர்யாவை கதறவிட்ட செல்வராகவன்!

0

சொந்த தம்பியே நம்பி கால்ஷீட் தராதபோது, தானே முன் வந்து தக்காளி மூட்டையில் விழுந்திருக்கிறார் சூர்யா. சும்மா கிடந்த செல்வராகவனை கூப்பிட்டு கால்ஷீட் கொடுத்ததன் விளைவு… அல்லும் பகலும் அடங்காத டார்ச்சரில் சிக்கிக் கொண்டாராம். எப்பவோ துவங்கிய படம் என்ஜிகே இன்னும் முடியவில்லை. காரணம், செல்வராகவனின் சோம்பேறித்தனமும் கட்டுக்கடங்கா சுதந்திரமும்தான்.

‘நோட்டா’ படத்தில் வந்த பல காட்சிகள் இந்த படத்திலும் இருந்ததால், எல்லாவற்றையும் நறுக்கி எறிந்துவிட்டு புதுசாக சிந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளானார் செல்வா. அதற்காக சிறிது காலம் படப்பிடிப்பை தள்ளி வைத்தவர் மீண்டும் துவங்கினாலும் இலக்கில்லாமல் பயணிப்பது போல ஃபீல் பண்ணினாராம் சூர்யா. அது மட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு ஒரு காட்சியோ இரண்டு காட்சியோதான் படமாக்குவாராம் அவர். இப்படியே போனால், வருஷக்கணக்கில் இழுக்கும் என்பதை உணர்ந்து ஒரு கட்டத்தில் கட்டி நெருக்க ஆரம்பித்திருக்கிறார். அங்குதான் முட்டிக் கொண்டதாம் இருவருக்கும்.

ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. பத்து நாள் கால்ஷீட் தருவேன். அதற்குள் படத்தை முடிச்சுடணும் என்கிற கண்டிஷன் அப்ளைக்குப் பின் கால்ஷீட் கொடுத்த சூர்யாவுக்கு கட்டு கட்டாக கடுப்பு. ஏன்? அந்த பத்து நாளும் போய் மேலும் பத்து நாட்கள் கேட்கிறாராம் செல்வா.

சுண்டைக்காய்ன்னா சொடுக்குன்னு நசுக்கிடலாம். சுரைக்காயை எப்படி? கொடுங்க கொடுங்க…

Leave A Reply

Your email address will not be published.