சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசன் இல்லை! வாள் சண்டை பயிற்சியெல்லாம் வீணாப் போச்சா?

1

ஆந்திராதான் கொண்டாடுகிறது ஸ்ருதிஹாசனை. ஆனால் தமிழ்சினிமா ரசிகர்களை பொருத்தவரை, மூக்கு சரியில்ல… முழி சரியில்ல… பேச்சு சரியில்ல… ஆக மொத்தம் பிகரே ரொம்ப வீக் என்கிற ரேஞ்சில்தான் போய் கொண்டிருக்கிறது நிலைமை. இந்த லட்சணத்தில் அவர் கமிட்டான சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகிக் கொண்டார் என்ற செய்தி சோஷியல் மீடியாவில் கசிந்தாலும் கசிந்தது. காமெண்ட் அடிக்கிறேன் பேர்வழி என்று கிழித்து தொங்கவிட்டுவிட்டார்கள் ‘ஸ்ருதியை விரும்பா சுந்தர புருஷர்’கள்.

ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் உருவாக்கவிருக்கும் படம்தான் சங்கமித்ரா. முழுக்க முழுக்க சரித்திரக்கதை. பாகுபலி வந்த கையோடு இந்த படத்தின் அறிவிப்பும் வந்ததால், பலருக்கும் இப்படத்தின் மீது சரி… தப்பு… பார்வைகள். எல்லாவற்றையும் சமாளிக்கும் விதத்தில், பாகுபலியை விட பிரமாதமான படமாக வரும் சங்கமித்ரா என்ற உறுதியை அளித்திருந்தார் அப்படத்தின் இயக்குனர் சுந்தர்சி.

படத்தின் அறிமுக விழாவே கேன்ஸ் திரைப்பட விழா அரங்கத்தில்தான் நடந்தது. இங்கிருந்து சுந்தர்சி, குஷ்பு, ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் என்று நட்சத்திர படையே போய் கொண்டாடியது விழாவை. படத்தின் வரும் பைட் காட்சிகளுக்காக வாள் பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டார் ஸ்ருதி.

எல்லாம் சுபமாக போய் கொண்டிருந்த வேளையில்தான், சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது தேனாண்டாள் பிலிம்ஸ். அந்த அறிவிப்பு வந்த அடுத்த சில நிமிஷங்களில், அவர் ஏன் படத்திலிருந்து விலகிக் கொண்டார் என்பதற்கான அறிவிப்பு வெளியானது. வழக்கம் போல அந்த அறிவிப்பில் யார் கையெழுத்தும் இல்லை.

படத்தின் ஸ்கிரிப்ட் முழுமையாக தன் கைக்கு வந்து சேராததாலும், படப்பிடிப்பு எப்போது என்கிற விபரங்கள் இல்லாததாலும்தான் அவர் விலகிக் கொண்டதாக கூறுகிறது அந்த விளக்கம்.

துரு புடிச்ச வாளி கிணத்தோட போச்சேன்னு சந்தோஷப்படறதா? இருந்த ஒரு ஓட்டை வாளியும் உள்ளாற விழுந்திருச்சேன்னு வருத்தப்படறதா? தலை சுத்துதுடா கோவாலு…

1 Comment
  1. Saravanan says

    சுருதி ஒரு பிரச்சனையே இல்ல. ஒரு நயனையோ, தீபிகாவையோ, போட்டு இன்னும் பெருஷா செய்யலாம். மெயின் பிரச்சனை அது கிடையாது. இது தான் – ஜெயம் ரவி, ஆர்யா வெச்சு முன்னூறு கோடி பட்ஜெட். வெளங்கிரும். நாராயணா, ..நீ கஷ்டப்பட்டு சின்ன சின்ன படமா எடுத்து சம்பாரிச்ச காசெல்லாம் இப்படி ஒரே படத்துல போவுதே. தேவுடா

Leave A Reply

Your email address will not be published.