‘பலூன் படத்தின் உரிமையை ஒட்டு மொத்தமாக வாங்கி இருக்கின்றது ‘Auraa Cinemas’

0

ஒரு தரமான திரைப்படத்தின் வெற்றிக்கு, சரியான விநியோகமும், பிரம்மாண்ட விளம்பரங்களும் மிக அவசியம். அத்தகைய சிறப்பம்சங்களை சிறப்பாக பெற்று, விநியோக துறையில் சிறந்து விளங்கி கொண்டிருக்கும் ‘Auraa Cinemas’ மகேஷ் கோவிந்தராஜ், தற்போது ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பலூன் படத்தின் உரிமையை ஒட்டுமொத்தமாக வாங்கி இருக்கிறார். ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த ‘பலூன்’ படத்தை சினிஷ் இயக்கி இருக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் ‘பலூன்’ படத்தின் முதல் பதிப்பு உரிமை, FMS, satellite மற்றும் சர்வதேச விநியோக உரிமை என அனைத்து உரிமையையும் முழுவதுமாக Auraa Cinemas வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

“பலூன் படத்தை பார்த்த பிறகு நான் மெய் சிலிர்த்து போய் விட்டேன். தரமான திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் Auraa Cinemas நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். அந்த வகையில் இந்த பலூன் திரைப்படம், எங்கள் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிறப்பான அடையாளத்தை பெற்று தரும் என்று முழுவதுமாக நம்புகிறோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் Auraa Cinemas மகேஷ் கோவிந்தராஜ்.

Leave A Reply

Your email address will not be published.