விஜய் படம்னா அலட்சியமா? ஆபிசரையே அலற விட்ட தெறி!

1

ஒரு வாரத்திற்கு முன் நடந்த ஒன் மேன் வார் இது! அந்த பெரிய ஆபிசர் சைன் பண்ணினால்தான் ‘தெறி’க்கான அடுத்த வேலையை பார்க்க முடியும் என்கிற நிலை! சம்பந்தப்பட்டவர் “நான்தான் பெரிய அப்பா டக்கர்” என்பது போலவே நடந்து கொள்கிறாராம் எல்லாரிடத்திலும். “அந்த ஆளு ஸ்ட்ரெய்ட் பார்வேடுங்க. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் லைன்ல வா…ன்னு சொல்றாருங்க” என்ற புலம்பல் சப்தம் அதிகமாகவே கேட்கிறது கோடம்பாக்கத்தில். “இதுக்கு முன்னாடி இருந்தவரு இப்படி இல்லேப்பா. துட்டை வெட்டுனா காரியம் நடந்துரும். இந்தாளு துட்டுக்கும் மசிய மாட்டேங்குறாரு. அதுக்காக ஆளு, தாராதரம், அவங்களோட அனுபவம், இதையெல்லாம் கூட அனுசரிக்கலேன்னா எப்படி?” என்கிற குரலும் சப்தமாகவே ஒலிக்கிறது.

சரி மேட்டருக்கு வருவோம். தெறியும் சைனுக்காக போனதாம். “இன்னைக்கு முடியாது. நாளைக்கு முடியாது. அப்புறம் பார்க்கலாம். அதுக்கே நேரம் இருக்கான்னு தெரியல. ஆமாம் உங்களுக்கு முன்னால நாலு பேரு லைன்ல இருக்காங்க தெரியுமா?” என்றெல்லாம் பில்டப் காட்டினாராம் ஆபிசர். அதையாவது பொறுத்துக் கொள்ளலாம். தமிழ்சினிமாவில் பல்லாண்டு காலமாக பலமான இடத்திலிருக்கும் அவரையும் நாலு மணி நேரம் ஆபிஸ் வாசலில் உட்கார வைத்துவிட்டாராம்.

“யாருகிட்ட வந்து அதிகாரத்தை காட்டுறார்? பார்த்துடுவோம் நானா அவரான்னு?” என்று கூறிய அந்த பெரிய மனிதர், ஆபிசருக்கு எதிராக கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துவிட்டார். அது மட்டுமல்ல, உங்களுக்கு முன்னால நாலு பேரு இருக்காங்க என்று கூறினாரல்லவா? அந்த நாலு பேரிடமும் ‘நாங்க வெயிட் பண்றோம். இவருக்கு சைன் பண்றதுல எங்களுக்கு ஆட்சேபம் இல்ல. முதல்ல இவங்க வேலையை முடிச்சுக் கொடுங்க’ என்றும் கையெழுத்து வாங்கிவிட்டாராம். அதுமட்டுமல்ல, தராதரம் தெரியாமல் தலைகீழ் ஆட்டம் போடுகிறார் என்பதற்கு ஆதாரங்களையும் திரட்டி, டெல்லிக்கு அனுப்பும் வேலையில் இறங்கிவிட்டார்.

தகவல் எப்படியோ ஆபிசருக்கு போனதாம். வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டாராம் அவர். இருக்கிற வேலையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உடனே எல்லா விஷயங்களுக்கும் ஆவண செய்திருக்கிறார். எப்படியோ? தன் கம்பீரத்தை சற்றும் விட்டுக் கொடுக்காமல் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார் மிஸ்டர் தெறி…

தெறிக்க விடுவோம்ல?!

1 Comment
  1. Reportrer says

    Yenda avan urupadiya avan velaya sencha unkaluku enna… athu enna tharatharam satttathukku munnadi ellarum onnu thaan… ithuku support vera

Leave A Reply

Your email address will not be published.