ஆன் லைன் புக்கிங் அநியாயம்! தோலுரித்த ஆர்.கே! காது கொடுக்குமா தயாரிப்பாளர் சங்கம்?

0

பேசாமல் ஆர்.கே வை தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவர் ஆக்கிவிடலாம். அதற்கப்புறமாவது தமிழ்சினிமா உருப்படும்! ஐம்பது வருஷமாக ஒரே மாதிரியான வியாபார முறை. ஒரே மாதிரியான சடங்கு, சம்பிரதாயங்கள் என்று ஆமை ஓட்டுக்குள் தலையை நுழைத்துக் கொண்டு அவஸ்தை படுகிறது தமிழ்சினிமா. ஆனால் ஆர்-கே கையில் விதவிதமான வியாபார தந்திரங்கள்!

ரஜினி படம் நஷ்டம். அஜீத் படம் நஷ்டம். விஜய் படம் நஷ்டம். தனுஷ், ஜெயம் ரவி, ஆர்யா, மாதிரியான அடுத்த லெவல் ஹீரோக்களின் படங்களும் நஷ்டம். அப்புறம் எப்படிதான்யா பொழக்கறது? என்று தயாரிப்பாளர்கள் கதற, அவர்களை விடவும் பலமாக கதறுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இதற்கெல்லாம் தீர்வுகாணும் விதத்தில்தான் அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கு தமிழகம் முழுக்க ஆயிரம் விநியோகஸ்தர்களை நியமித்திருக்கிறார். இவர்கள் வீடு வீடாக போய் டிக்கெட் விற்கிறார்கள். இரண்டு டிக்கெட் வாங்கினால் மூன்று டிக்கெட் இலவசம். குடும்பத்தோட தியேட்டருக்கு வா… என்று அழைக்கிறார்கள். இதற்கு நல்ல ரிசல்ட். வைகை எக்ஸ்பிரஸ் திரைக்கு வரும்போது திரையிட்ட தியேட்டர்கள் புல் ஆவதுடன், ஒரு வாரம் ஓட்டத்திற்கு கியாரண்டி!

இந்த திட்டத்தை அப்படியே முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மாற்றும் திட்டத்திலிருக்கிறார் ஆர்.கே. அவர் கேட்கும் ஒரு கேள்விக்கு இங்கிருக்கும் எந்த சங்கமும் வாயை திறக்க முடியாது. ஏன்? தெரிந்தே ஓட்டை போட விட்டிருக்கும் இவர்களால் என்ன பதில் சொல்லிவிட முடியும்?

ஆமாம்… அது என்ன கேள்வி? ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணினா சர்வீஸ் சார்ஜுன்னு ஒரு டிக்கெட்டுக்கு முப்பது ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குறான். பத்து டிக்கெட் புக் பண்ணினா 300 ரூபா எக்ஸ்ட்ரா. இதுல பத்து பைசாவாவது தயாரிப்பாளருக்கு வருதா?

வராதுன்னு தெரிஞ்சேதான் வாயை மூடிக்கிட்டு இருக்கு சங்கம்!

(எலக்ஷன் வர்ற இந்த நேரத்துலயாவது கோஷ்டி பூசல், ஈகோவையெல்லாம் மூடி வச்சுட்டு ஆர்.கே வை கூப்பிட்டு அட்வைஸ் கேளுங்க. மறக்காம அதற்கு செயல் வடிவம் கொடுங்க. தமிழ்சினிமா உருப்படும்)

Leave A Reply

Your email address will not be published.