கமல் பெயரை நாசப்படுத்த அவர் மகள் அக்ஷரா ஒருவர் போதும்!

1

கமல் எவ்வளவு பெரிய மகா நடிகன் என்பதற்கு இனிமேல் தனியாக விருதுகள் செய்யத் தேவையில்லை. அவர் தமிழ்சினிமாவின் ஐம்பதாண்டுகால வரலாற்று சுருக்கம்! இன்னும் சுருங்கிவிடாத மார்க்கெட் சொல்லும் கமலின் சாதனையை! அப்படியாப்பட்ட கமலுக்கு இப்படியாப்பட்ட மகள்(கள்). ஸ்ருதியை ஏம்ப்பா இதுல சேர்க்கல? என்ற கேள்விக்கு முன் பதில்கள் ஆயிரம் உண்டு. இந்த செய்தி அக்ஷராவுக்காக மட்டுமே!

விவேகம் படத்தில் அக்ஷராவும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். முதலில் இப்படத்தில் நடிக்க தயங்கியவரை நேரில் சந்தித்து கதையை சொல்லி கன்வின்ஸ் செய்திருக்கிறார் டைரக்டர் சிவா. அந்த பலன் இப்போது சிவாவின் கண்களுக்கு பளிச்சென தெரிந்திருக்கும். ஏன்? அஜீத், காஜல் அகர்வால் தவிர, விவேகம் பப்ளிசிடி விஷயங்களில் முன் நிறுத்த தகுதியான ‘லுக்’கும் பின்புலமும் அக்ஷராவுக்கு மட்டுமே உண்டு. அஜீத் பிரமோஷனுக்கு வர மாட்டார் என்பது அவரை படைக்கும் போதே பிரம்மன் வரைக்கும் தெரிந்த விஷயம். மீதியிருக்கிற காஜலும், அக்ஷராவும்தான் பிரமோஷனுக்கு கை கொடுக்கணும். இங்கும் காஜல் கழன்று கொள்ள… சமீபகாலமாக தன் ஒரே குருவி வாயை வைத்துக் கொண்டு விவேகம் பற்றி ஓயாமல் ஒப்பித்து வருகிறார் அக்ஷசு.

அதில் ஒன்றுதான் இது. “இந்தப்படத்தில் நடிக்கும்போது சில காட்சிகளுக்கு 20 டேக் வாங்கினேன். அப்பல்லாம் அஜீத் சார்தான் கூல் கூல்…நோ டென்ஷன்னு சொல்லி என்னை ரிலாக்ஸ் பண்ணினார்”. இது அக்ஷராவின் ஸ்டேட்மென்ட்.

கமல்ஹாசனின் மகளா இருந்துகிட்டு இருபது டேக் வாங்குனேன்னு சொல்றீங்களே… ஒங்களுக்கெல்லாம் ————-ட்கமா இல்ல?

1 Comment
  1. Kumaran says

    Nowadays..Keyboard n a website is enough to post whatever crap u want..
    I m remembering vikram vedha dialouge..

Leave A Reply

Your email address will not be published.